பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 அண்ணல் அநுமன்

(வளையும் வாள்எயிறு - வளைந்திருக்கும் பிரகாச முள்ள கோரப்பல்; கணிச்சியான் - சிவபெருமான்; அளை - குகை, அரி - சிங்கம்) என்று கூறுவான். ஆனால், அவனது சிந்தனையில் இராம லக்குவனர்க்கும் இவனுக்கும் பல நாள் போர் நடைபெறும் என்பதைச் சிந்தித்து உணர்கின்றான்.

"இளைய வீரனும் ஏந்தலும்

இருவரும் பலநாள் உளைய உள்ளபோர் இவனொடும்

உளதென உணர்ந்தான்."" (இளைய வீரன் - இலக்குவன், ஏந்தல் - இராமன்; உளைய - சிரமமுண்டாம்படி)

இத்தகைய ஒரு பெருவீரனைத் துணையாகக் கொண்டிருக்கும்போது இராவணன் மூன்றுலகத்தாரையும் வென்றது ஒரு பெருஞ்செயலாகப் பாராட்டத் தக்கதன்று என்று கருதுகின்றான்."

மண்டோதரி : அடுத்து இராகவன் கழல் (சிறிய திருவடி) எனப் புகழ் பெற்ற அநுமன் அட்சயன், அதிகாயன் மாளிகைகள், அகன்ற அகழி முதலியவற்றைக் கடந்து, வித்தியாதர மாதர்கள் வதியும் வீதிகளையும் தாண்டி வருபவன் மயன்மகள் உறைகின்ற மாடத்தைப்" பார்க்கின்றான்." அவளுக்குக் கரும்பையும் சுவை கைப்பித்த சொல்லியர் செய்யும் பலவேறு பணிவிடைகளைக் கண்டு, அவளைச் சீதை என்று மயங்கி வருந்துகின்றான்." பிறகு

"எற்பு வான்தொடர் யாக்கையால்

பெரும்பயன் இகந்தனென் இதுநிற்க அற்பு வான்தனை இற்பிறப்பு

அதனொடும் இகந்துதன் அருந்தெய்வக்

13. சுந்தர. ஊர்தேடு - 141 14. கந்தர ஊர்தேடு - 142 15. கந்தர. ஊர்தேடு - 195 16. சுந்தர. ஊர்தேடு - 197, 199

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/53&oldid=1360590" இலிருந்து மீள்விக்கப்பட்டது