பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஞ்சா நெஞ்சன் 81

(2) தேவர்களின் வேண்டுகோளின்படி சுரசை என்பாள் அநுமனது பலத்தை ஆராய அரக்கி உருக்கொண்டு வந்தாள்.

"ஆன்றுற்ற வானோர் குறைநேர

அரக்கி யாகித் தோன்றுற்று நின்றாள் சுரசைப்பெயர்ச்

சிந்தை தூயாள்.'" வந்தவள், அதுமனை நோக்கி, "நீ இங்கு வந்தது தியே எனலாய எனது பசிப்பிணியைத் தணிப்பதற்காகவே போலும்” என்றான்.

"நீயே இனிவந்துஎன் நினங்கொள்

பிணங்கு எயிற்றின் வாயே புகுவாய் வழிமற்றிலை

வானின் என்றாள்.' (நிணம் - மாமிசம், பிணங்கு - வளைந்த எயிறு - கோரப்பல்; வானின் - ஆகாயத்தில்)

அதற்கு மாருதி மறுமொழியாக, "பெண்ணாகிய நீ பசிப்பிணியால் நொந்தாய்; இராமனது கட்டளையை நிறைவேற்றிவிட்டுத் திரும்பி வந்தால் என் யாக்கையை உண்பாய்; யானும் உதவற்கு உடன்படுவேன்” என்று நட்பால் சொல்லினன்.

அநுமன் சொன்னதைக் கேளாமல் அவ்வரக்கி "உன்மேல் ஆணை, நான் உன்னை இப்போதே விழுங்கியே தீர்வேன்” என்று கூற, அதற்கு அநுமன் சவாலாக, "நான் உன் வாயிற் புகுந்து செல்லுகின்றேன்; உனக்கு ஆற்றல் இருந்தால் என்னை விழுங்குவாய்" என அலட்சியமாகக் கூறினன்"

"அககாலை அரக்கியும் அண்டம்

அனந்த மாகப் புக்கால் நிறையாத புழைப்பெரு

வாய்தி றந்து விக்காது விழுங்க நின்றாள்.'"

6. சுந்தர. கடல்தாவு - 55 7. சுந்தர. கடல்தாவு - 67 8. சுந்தர. கடல்தாவு - 69 9. சுந்தர. கடல்தாவு - 70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/82&oldid=1360634" இலிருந்து மீள்விக்கப்பட்டது