பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணக்குன்றன் 151

என்று கூறுவதும் சிந்திக்கற்பாலது. துணங்கிய கேள்வி யுடையாரிடையேதான் பணிந்த மொழியைக் காணலாம். அநுமன் கூறியவற்றை நோக்குவோம்"

(அ) நீரே நன்குணர்ந்த வித்தகர். வேறு ஒருவர் உமக்குச் சொல்லவேண்டும் என்பது இல்லை; மேலும், இச்சேனையி லுள்ள அறிவுடையார் எல்லாம் ஆராய்ந்து ஒருபடியாகத் தீர்மானமான கருத்தையும் தெரிவித்தாயிற்று; இந்நிலையில் அடியேன் சொல்லுவதற்கு என்ன உள்ளது? (88)

(ஆ) தூய்மையான அமைச்சர்கள் துணிந்து கூறியது மிகவும் தூய்மையானதே. ஆயினும், ஒன்று கூறுவேன்; இங்குள்ளார் கருதுவது போல இவனைத் தீக்குன முடையவன் என்று யான் ஐயுறவில்லை. அதற்கு ஏற்பன சிலவற்றை அடியேன் சொல்லியே ஆகவேண்டும். (89)

(இ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ஆதலால், இவர் வஞ்சனை இல்லாதவர் என்பது முகத்தில் தெரிகின்றது. மேலும், பகைவர்கள் பலவகை மாயைகள் செய்து ஏமாற்றலாம்; நம்மைப் புகலாக வந்து சேர்தல் என்பதோ நிகழாது; இதனாலும் இவர் உண்மையானவர் என்றே தெளியலாம். (90)

(ஈ) இருட்டானது பள்ளமான இடத்திலல்லாமல் ஒளி உள்ள இடத்தில் மிக்குத் தோன்றுமோ? அது போலத் திருட்டுத்தனத்தினால் விளைவன யாவும் ஒருவர் மனத்தில் தானே தங்கி இருக்கும். ஆதலால், மனத்தில் மறைந்திருக்கும் வஞ்சகம் அவரவர்களுடைய வாயினின்றும் பேச்சு வருவதற்கும் முன்பாக, மெள்ளத் தம்முடைய முகமே சொல்லிவிடும். (91) "

(உ) தன் அண்ணனால் அலக்கண் உற்றார்க்கு அபயமளித்து நல்வாழ்வு அளித்தவன் இராமன் என்பதைக் கேள்வியுற்ற வீடணன், தன் அண்ணனால் துரத்தப்பெற்று அலக்கண் உற்றுத் தரும மூர்த்தியாகிய இராமபிரானைப்

30. யுத்த. வீடணன் அடைக்கலப். 87 - 105. 31. "அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம், கடுத்தது காட்டும் முகம்" என்பது வள்ளுவம் (குறள் - 706) குறிப்பறிதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/152&oldid=1361343" இலிருந்து மீள்விக்கப்பட்டது