பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 அண்ணல் அநுமன்

- கடந்து நின்ற திகிரி - திருவாழி கரகம் - கமண்டலம்; துறந்து - நீக்கி)

பாட்டைப் பல முறை படித்து, அதன் கம்பீரமான நடையையும் பொருளையும் அறிந்து மகிழ வேண்டும்; அநுமனின் சொல்திறனையும் பாராட்ட வேண்டும்.

'இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு

உறுதி பயப்பதாம் தூது" என்ற வாக்கைச் சிந்தித்து அநுமனின் அஞ்சா நெஞ்சத்தை யும், தனக்கு அழிவைத் தருவதாக இருப்பதைப் பொருட் படுத்தாத துணிவையும் கண்டு வியப்பெய்த வேண்டும்.

(4) வாலி, அங்கதன் ஆகியவர்களைப் பற்றிய பேச்சு நடுவில் வந்ததால், இராவணன் வாலியின் நலத்தை விசாரிக்கும் போக்கில்,

"வாலிசேய் விடுத்த தூத ! வன்திறல் ஆய வாலி

வலியன்கொல்? அரசின் வாழ்க்கை நன்றுகொல்? என்ன லோடும்” ” என்று வினவ, அநுமன் கூறலானான். எங்ங்னம்? "அஞ்சலை அரக்க! பார்விட்டு

அந்தரம் அடைந்தான் அன்றே வெஞ்சின வாலி மீளான்

வாலும்போய் விளிந்த தன்றே அஞ்சன மேனி யான்தன்

அடுகணை ஒன்றால் மாழ்கித் துஞ்சினன், எங்கள் வேந்தன்

சூரியன் தோன்றல் என்றான்' (அந்தரம் - வானுலகம்; மீளான் - திரும்ப மாட்டான் விளிந்தது - அழிந்து போயிற்று அஞ்சனம் - மை; அடு - பகையை அழிக்கவல்ல; கணை - அம்பு; மாழ்கி - வருந்தி; சூரியன் தோன்றல் - சுக்கிரீவன்)

31. குறள் - 690 (துளது) 32. கந்தர. பிணிவிட்டு - 83 33. சுந்தர. பிணிவீட்டு - 84. இங்ங்ணம் ஒரு தூதன் பேசுவதற்கு, அதுவும் நீதியற்ற ஒர் அசுரக் கோமான் முன் பேசுவதற்கு எவ்வளவு துணிவு வேண்டும்! அதுமனது துணிவைக் கண்டு வியக்கின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/121&oldid=1361281" இலிருந்து மீள்விக்கப்பட்டது