பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒரே இரவில் சிதம்பர ரகசியம்

1957-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலாகப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தல்லவா? அதன் பிறகு சிதம்பரத்தில் ஒர் இடைத் தேர்தல் வந்து விட்டது. அதில் தி. மு. க. சார்பாகப் புலவர் ஆறுமுகம் போட்டியிட்டதாக எனக்கு நினைவு! தில்லை வில்லாளன் தேர்தல் பணிகளுக்கு முழுப் பொறுப் பேற்றுத் தொண்டாற்றினார். தேர்தலுக்குச் சில நாட் களிருக்கும் போது ஏதோ முக்கியமான செலவுக்குச் சிறிது பொருள் தேவைப்பட்டது போலும் சென்னையிலிருந்த அண்ணாவிடம் தொலைபேசி மூலம் அவர் அது பற்றிப் பேசினார்.

சென்னை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக மூன்றாவது மாநாடு அப்போது S. T. A. A. திடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தத்துவமேதை டி. கே. சீனிவாசன் இங்கே தலைமையுரை ஆற்றிக் கொண்டிருக்கிறார். புதுமையான அமைப்பாகத் தலைவர்கள் அமரும் மேடையிலிருந்து சற்று முன்புறம் தனியே வந்து, அங்குள்ள மைக்கில் பேசவேண்டும் அவ்வாறு அவர் பேசுகிறார். புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். அவர்கள் அப்போதுதான் மேடைக்கு வந்து அமர்கிறார்! அவரைக் கண்டதும் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய் இன்றனர்! தலைவருக்குத் தன் பின்னால் நடப்பது என்ன என்பது முதலில் புரியவில்லை! திரும்பிப் பார்க்கிறார்; தன்னுடைய உரை பிடிக்காமல் கைதட்டுகிறார்களோ என்று! உண்மை அறிந்ததும், கோபங்கொண்டு, தொடர்ந்து பேசாமல், போய்த் தனது இருக்கையில்