பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்

3



முதல் இரண்டு நூற்றாண்டுகளிலும் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளிலும் காவிரிப் பூம்பட்டினம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது என்பதற்குச் சான்றுகள் பல உண்டு. இந் நாட்டிலிருந்து பலவகைப் பொருள்கள் அயல் நாடுகட்கு அனுப்பப்பட்டன. கரிகாற் சோழன் காலத்தில் இத் துறைமுகம் உயர்ந்த நிலையில் இருந்தது. அயல்நாட்டு வாணிபர் புகார் நகரிற் குடியேறி இருந்தனர். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்கள் இயற்றப்பட்ட கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இப் பெருநகரம் சிறந்த வாணிபத்தலமாக விளக்கம் பெற்று இருந்தது. கடைச்சங்ககாலச் சோழ மன்னருள் பீடுமிக்கவன் கரிகாலனே ஆவன். சோழவனநாடு உணவு வகையிற் சிறப்புற்று இருந்தமையின், சோழ வளநாடு சோறுடைத்து, என்று புகழப்பட்டது.

சேர நாடு

சேர நாடு என்பது கொச்சி, திருவாங்கூர் நாடுகளும் மேல் கடற்கரை வெளியும் மலையாளக் கோட்டங்களும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதன் தலைநகரம் வஞ்சிமாநகரம் என்பது முசிறி. தொண்டி என்பன சிறந்த துறைமுகப் பட்டினங்கள். இந்நாட்டிலிருந்து மிளகு, யானைமருப்பு, தேக்கு, அகில், சந்தனம் முதலிய மரங்கள் வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த நாட்டை ‘வானவர்’ எனப்பட்ட சேரர் நெடுங்காலமாக ஆண்டு வந்தனர். அவருட் சிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பவன். அவன் மகனான செங்குட்டுவனே கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் பெயர் பெற்றபேரரசனாகத் தமிழகத்தில் இருந்தவன்.

தொண்டை மண்டலம்

ஆதொண்ட சக்கரவர்த்தி: இனி, நம் பல்லவர் தொடர்பான தொண்டை நாட்டைப் பற்றிய செய்திகளைக் காண்போம். “நெடுங்காலத்திற்கு முன்தொண்டைநாடு ‘குறும்பர் நிலம்’, என்று பெயர் பெற்றிருந்தது. குறும்பர் தம் ஆடு மாடுகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/23&oldid=516145" இலிருந்து மீள்விக்கப்பட்டது