பக்கம்:இரு விலங்கு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xi
படத்தில் கழுத்தில் பழுத்தசெவ் வாயில்

              பனையில்உந்தித்
தடத்தில் தனத்தில் கிடக்கும்வெங் காம

              சமுத்திரமே'

என்பது முன்னே நாம் பார்த்த பாட்டு. (19)

வள்ளிநாயகிக்கு மணவாளனாக முருகனைத் தியானிப் பதில் மற்ருெரு பயனும் உண்டு. அப்பெருமாட்டியை முருகன் ஆட்கொண்டது, ஆருயிர்களை அவன் வலிய வந்து தடுத்தாட்கொள்ளும் கருணைத் திறத்தைக் காட்டுவது: அந்த வரலாற்றை நினைக்கும்போது நாமும் வள்ளியின் நிலையைப் பெறவேண்டும் என்ற பாவம் உண்டாகவேண்டும். பக்தர்கள் இராதாகிருஷ்ணனையும் வள்ளிநாயகனையும் பாடிப் பரவிக் கூத்தாடுவது தம்மை இறைவனுடைய நாயகிகளாக எண்ணும் பாவம் முறுகவேண்டும் என்பதற் காகத்தான். முருகனடியார்கள் வள்ளிநாயகியை முருகன் எளி வந்து ஆண்ட கருணையைப் பலபல வகையில் பாராட்டி யும் பாடியும் இன்புறுவதற்குரிய காரணமும் இதுவே. நாமே வள்ளிநாயகி ஆக வேண்டும். உள்ளத்தால் பெண்மையை மேற்கொள்ள வேண்டும். இப்படித் தியானம் பண்ணப் பெருந்தவம் செய்திருக்க வேண்டுமாம்.

“காளைக் குமரே சனெனக் கருதித்

தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைக் குழல்வள் ரிபதம் பணியும்

வேளைச் சுரபூ பதிமே ருவையே”

என்று கந்தர் அநுபூதியில் அருணகிரியார் பாடுகிறார்.

முருகனை வள்ளிமணாளனாகத் தியானித்துப் பழகினல் நாமும் பதியாகிய அவனை அடையும் காதலி நிலையில் இருக்கிறோம் என்ற நினைவு நம் உள்ளத்தில் படியும். அப்போது நாம் ஆண் என்ற எண்ணமும் அதன் விளைவாகிய காமமும் சுருங்கும். பெண் பெண்ணைப் பார்த்துக் காமம் கொள்வது இயல்பாகாது. ஆதலின் நாம் குமரநாயகனை அடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/13&oldid=940442" இலிருந்து மீள்விக்கப்பட்டது