பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனத்துறவி 151 கமலா (யோசனையோடு) ; எந்தப் பாட்டு ? சுப்பிர : எங்கு நீ யுள்ளாய்-என்ற பாட்டு, கமலா : ஐயையோ, அதற்கு விபரீதமான அர்த்தம் கற்பித்துக் கொண்டீர்களா ? நான் எங்கள் குல தெய்வம் முருகனை நினைத்தல்லவா பாடினேன் ? சுப்பிர (விசனத்தோடு): கமலா, இந்தப் பொல்லாத மனம் செய்கிற சூழ்ச்சியிலே நான் ஏமாந்து போனேன். ஆசை மீறுகிறபோது மனம் இல்லா ததையெல்லாம் தனது விருப்பத்தின்படியே கற்பனை செய்து கொள்ளுகிறது. குழந்தை லக்ஷ்மியின் கபட மறியாத் பேச்சும் என்னை ஏமாற்றிவிட்டது. கமலா : இளமையிலே எத்தனையோ சோதனைகள் ஏற்படு கின்றன. அவற்றில் ஏமாந்து மயங்காமல் நன் னெறியில் நிற்கும் திறமையை இறைவன் நமக்கு அருள வேண்டும். அதுவே என்னுடைய பிரார்த்தனை. சுப்பிர : கமலா, உன் மூலம் எனக்குச் சோதனை ஏற் பட்டது எனது பாக்கியந்தான். கடவுள் அந்த மட்டிலும் எனக்குக் கருணை காட்டியிருக்கிரு.ர். நான் சென்று வருகிறேன். இம்முறை மட்டும் என்னை மன்னித்துவிடுவாயா ? இனி நான் தவற மாட்டேன். நான் இப்பொழுதே புறப்படுகிறேன். [எழுந்து புறப்படுகிருன்.) கமலா : சுவாமி, எங்கே செல்லுகிறீர்கள்? தங்களுடைய பாட்டு இனிமேல் எனக்கு...... சுப்பிர : எங்கு போகிறேனே தெரியாது. எனது மனம் பரிசுத்தமடைந்து பலம் பெற்று நின்ருல் உன்னைக்