பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அன்னி பெசண்ட் அம்மையாரின்

பட்டவர் அன்னி பெசண்ட் என்றால் அந்த அம்மையார் எத்தகையவராக இருப்பார்; என்னிப்பார்க்க வேண்டும்:


அன்னிபெசண்ட் இங்கிலாந்து நாட்டிலே தோன்றியவர் இடுக்கண் வாழ்வுச் சம்பவங்களே அவரது இளமை வாழ்வு; பல்கலை வித்தகராக விளங்கிய வீரத்தாய்க்குலம்:


தமிழகம் வந்தார்: வீரம் பிறந்த மண்ணிலே கால் வைத்தப் பண்புக்கு ஏற்றவாறு-ஒவ்வொரு துறையிலும் வீராங்கனை என்ற முத்திரையைப் பொறித்தார்.


தியோ சாபிகல் சங்கத்திற்குரிய தலைவியானார்: "நியூ இந்தியா" என்ற பத்திரிகைக்கு ஆசிரியரானார்: ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து, இந்திய சுதந்திரத்துக்காக ஆட்சிக் இளர்ச்சியிலே ஈடுபட்டார்:


சூறாவளிப் பிரச்சாரம் இந்தியா முழுவதும் மேற்கொண்டு சுற்றினார்! போராட்டம் செய்தார்: கைதானார்! மூன்று மாதம் சிறைக்காவல் பெற்றார்:


இங்கிலாந்திலே பிறந்த பெண் ஒருத்தி இந்தியாவிலே உள்ள தமிழகம் வந்து, சுய ஆட்சிப் போராட்டத்தில் கைதாகி, சிறைவாழ்வுப் பெற்ற ஒரு வீராங்கனையின் அஞ்சா நெஞ்ச அரசியல் வித்தகத்தைப் பாராட்டித்தான் திரு.வி.க தனது வாழ்க்கைக் குறிப்புகளிலே எழுதினாரே தவிர, நேற்று பெய்த மழையிலே முளைத்த அரசியல் காளான்களை அல்ல என்பதற்காகவே இந்த சுருக்கக் குறிப்புக்களைக் கொடுத்தோம்.


அப்படியானால், அன்னி பெசண்ட் அம்மையார் யார்? அவர் வரலாறு என்ன? வாழ்க்கை என்ன? சோதனைகள் என்னென்ன? சாதனைகள் என்னென்ன என்பதை சற்று விவரமாகவே பார்ப்போம்!


இந்திய மக்களின் இதய வானத்திலே இரண்டு வெளி நாட்டு விண்மீன்கள் அன்றும், இன்றும், என்றும் சுடர்