பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 அண்ணல் அநுமன்

திறன் நிறைவு பெறும் (220), இங்ங்னம் சினத்தினால் பேசும் அநுமன் சிந்தித்துத் தனக்குள் சொல்லிக்கொள்ளுகின்றான். "நான் இராவணனையும் இலங்கையையும் அழிப்பது காகுத்தனின் கட்டளையன்று. அன்றியும் ஒரு காரியத்தைச் செய்ய முயன்று வேறொரு காரியத்தைச் செய்தல் அறிவுடைமை ஆகாது. சாலவும் ஆலோசித்தால் இது பெரும்பிழையுமாகும்"

'ஆலம் உண்ட நீலகண்டனைப்போல் ஆற்றல் உடையவராயினும் பெரியோர்கள் ஆலோசியாமல் ஒரு காரியத்தைச் செய்யார். அதற்கேற்ற காலத்தை எதிர்நோக்கி அமைந்திருப்பர்’

'இராவணனோடு போர் உடற்றுமாறு உண்டான பெருஞ்சீற்றம் என் மனத்தில் அடங்கிவிடக் கடவது கற்றைப் பூங்குழலாளைச் சிறைவைத்த கண்டகனை ஒரு குரங்கு போர் செய்து முடித்தது என்ற பேச்சு எழுந்தால், முனை வீரன் கொற்றப் போர்ச் சிலைத் தொழிற்கு ஒரு குறை உண்டாகிவிடும்"

இங்ங்னம் சிந்தித்துச் சினம் அடங்கிய அநுமன் மகளிர் எவரும் இராவணனுடன் படுத்து உறங்கவில்லை; இவன் நிலையும் புல் நிலைய காமத்தால் தவிக்கின்ற நிலையாக உள்ளது. பிராட்டியும் இவனுக்கு இனங்காமல் நல்ல நிலையில் உள்ளாள் என்ற நற்செய்தியும் எனக்குச் சொல்வதாக உள்ளது” " என்று ஊகத்தால் உணர்ந்து கொள்ளுகின்றான்.

ஈண்டும் கவிநாயகனின் சிந்தனை அவனை அல்வழியில் செல்லாது தடுத்தலைக் காணமுடிகின்றது.

சிந்தனை-3: இன்னும் பல்வேறு வகையாகச் சிந்தித்துக் கொண்டு’ அசோக வனத்தைக் காண்கின்றான்; சிந்திக் கின்றான் : "இந்த மலர்வனத்தில் பிராட்டியைக்

20. சுந்தர. ஊர்தேடு - 221, 222, 223

21. சுந்தர. ஊர்தேடு - 224

22. சுந்தர. ஊர்தேடு - 226 - 233 : இந்தக் கவிதைகள் படித்து அநுபவிக்கத் தக்கவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/57&oldid=1360595" இலிருந்து மீள்விக்கப்பட்டது