பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஞ்சா நெஞ்சன் 87

இடிக்க - பேரொலி உண்டாக) என்றும், தோள் கொட்டுதலை,

"பூவும் குன்றமும் பிளக்க வேலை

துளக்குறக் கொட்டி னான்தோள்" 2: (பூ - பூமி, குன்றம் - மலை, துளக்குற நிலை கலங்க) என்றும் கவிஞன் நமக்குக் காட்டுவான். அரக்கர்களிடையே யும் அநுமனிடமும் கடும்போர் நிகழ்கின்றது. சேனைகள் அனைத்தையும் அந்தந்தச் சேனைகளையே தன் போர்க் கருவிகளாகக்கொண்டு அழித்தொழிக்கின்றான்' காலன் தன்மையனான சம்புமாலி தனிப்பட்டு நிற்கின்றான்'; அந்நிலையிலும் போர்க்கு விரைகின்றான். அவனை நோக்கி, பூத்த மரம் போல் புண்ணால் பொலிகின்ற மாருதி, "நீ தனிப்பட்டாய் என்னுடன் போர் செய்தால் நீ மாள்வது உறுதி; வலி குறைந்து எளிமைப்பட்டு நிற்கும் நின் உயிரை வாங்குதல் நீதி அன்று; உன்னை விடுகின்றேன்; திரும்பிப் போ' என்று இரக்கம் தோன்றக் கூறுகின்றான்.

அநுமன் உரையைப் பொருட்படுத்தாது சம்புமாலி சினந்து அம்புமாரி பொழிகின்றான்; அனைத்தையும் தன் கையிலுள்ள எழுவால் விலக்குகின்றான், அநுமன். சம்புமாலி அந்த எழுவை விலக்கிவிடுகின்றான்; சற்று மனம் சலித்துப் பின்னர் தன் கைகளினாலேயே அம்புகளை மோதித் தள்ளுகின்றான், மாருதி.

"ஒலித்தார் அமரர் கண்டார்

ஆர்ப்பத் தேரின் உட்புக்குக் கலித்தான் சிலையைக் கையால்

வாங்கிக் கழுத்தின் இடையிட்டு வலித்தான் பகுவாய் மடித்து

மலைபோல் தலைமண் இடைவீழ

25

21. சுந்தர. சம்புமாலி - 18 22. சுந்தர. சம்புமாலி - 30 23. சுந்தர. சம்புமாலி - 41 24. சுந்தர. சம்புமாலி - 43 25. சுந்தர. சம்புமாலி - 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/88&oldid=1360800" இலிருந்து மீள்விக்கப்பட்டது