பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 அண்ணல் அநுமன்

"மறியும் வெண்திரை மாகடல்

உலகெலாம் வழங்கிச் சிறிய தாய்சொன்ன திருமொழி

சென்னியிற் சூடி நெறியின் நின்றதன் நாயகன்

புகழென நிமிர்ந்தான்' " (திருமொழி - திருவார்த்தை சென்னி - தலை: நெறி - நன்னெறி, நாயகன் - இராமன்) என்று காட்டுவான், கம்பன். இங்கு அநுமன் யோகபலத்தால் பேருருவம் கொண்டதாகக் கூறுவான், கம்பன். இந்த உருவத்தின் ஒருபகுதியைமட்டிலுந்தான் இந்திரசித்து பார்க்க முடிந்தது." ஒரு நிலையில் அநுமனது போரின் கொடுமையைத் தாங்கமுடியாமல் நான்முகன் கணையைத் தொடுக்கின்றான். அது அரவு வடிவங்கொண்டு அதுமனைப் பிணிக்கின்றது. இவண் கூறப்பெற்றது எட்டாவது பேருருவம். (9) இராவணன் முதற்போர் புரியுங்கால், இலக்குவன் அவனுடன் மோதுகின்றான். ஒருநிலையில் இராவணன் இலக்குவனின் அம்பறாத்துாணிரத்தைத் துணித்து விடுகின்றான். அப்போது இளைப்பாறிய நிலையிலிருந்த அதுமான் இராவணனின் தேர் எதிரே நடந்து நெருப்புப் புறப்பட விழித்து இம்மாயப்போரைத் தவிர்; பின் போர்கள் உள்ளன என்று கூறியவண்ணம் பேருருவம் கொள்ளுகின்றான்.

“நின்றான் அவன் எதிரேஉலகு

அளந்தான்என நிமிர்ந்தான்' என்பது கவிஞனின் வாக்கு அடுத்து வரும் கவிதையில் மேலும் விளக்குவான் :

"எடுத்தான்வலத் தடக்கையினை

அதுபோய்உல. கெல்லாம்

அடுத்தாங்குற வளர்ந்தான்திரு வடியின்வரவு அன்னான்

22. சுத்தர. பாசப் - 41 23. கந்தர. பாசப் - 42

24. யுத்த முதற்போர். 161

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/73&oldid=1360620" இலிருந்து மீள்விக்கப்பட்டது