பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விழையும் உருவினன் 75

தேவர்களின் சிந்தாகுலத்தை இவன் போக்கிவிட்டான் என்று கண்டோர் கருதும்படி நெடுஞ்சாரிகை திரியலானான். இங்ங்னம் சாரிகை திரிவதால் இந்திரசித்தை இலக்குவன் எளிதில் வெல்லலாம் என்ற எண்ணமுண்டாக அவ்வழியால் தேவர்களின் கவலையைக் களைந்தவனாகின்றான். இருவரிடையே நடைபெறும் போரை வருணிக்கப்புகும் கம்பநாடன்,

"கார்ஆயிரம் உடனாகிய

தெனலாகிய கரியோன் ஓராயிரம் பரிபூண்டதொ

ருயர்தேர்மிசை உயர்ந்தான் நேராயினர் இருவோர்களும்

நெடுமாருதி நிமிரும் பேராயிரம் உடையான்எனத்

திசைஎங்கனும் பெயர்ந்தான்.”* என்ற பாட்டைத் தொடங்குகின்றான். ஆயிரம் பரிகள் பூண்டதோர் தேரில் இந்திரசித்து உயரத் தோன்றுகின்றான். இலக்குவனும் திரிவிக்கிரமனாகிய ஓங்கிய ஆயிரம் பேர் படைத்த திரும்ால் போல நெடிய மாருதிமீது திரியலானான். இதனால் இருவரும் நேருக்கு நேராகின்றனர். நெடுமாருதி என்ற தொடர் அநுமனும் இந்திரசித்தனின் தேர் அளவிற்கு ஓங்கி வளர்ந்தமையைக் குறிப்பாற் புலப்படுத்துகின்றது. இங்கு அநுமன் மேற்கொண்டது பதினொன்றாவது பேருருவம் என்பதாகக் கொள்ள ஏதுவாகின்றது.

(2) இராமன் கானகம் செல்வதற்கு முன், தேவர்கள் கருத்துப்படி அரசை மேற்கொள்ளுமாறு இராமன் பரதனை வேண்ட அவனும் ஒரு சூளுரையுடன் அதற்கு ஒருப்படுகின்றான்.

"ஆமெனில் ஏழிரண் டாண்டில் ஐய!நீ நாமநீர் நெடுநகர் நண்ணி நானிலம் கோமுறை புரிகிலை என்னில் கூர்எரி

33

சாம்.இது சரதநின் ஆணை சாற்றிலேன்

32. யுத்த நிகும்பலை யாகம் - 103 33. அயோத்தி. திருவடி - 133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/76&oldid=1360624" இலிருந்து மீள்விக்கப்பட்டது