பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

63

கர்; புண்ணியத் தொழில் புரிந்தவர்; நேற்றைய வசைகள் உமது மனதையும் புண்படுத்தி இருக்குமே; என்னால் அல்லவா உமது மனதும் புண்படும் நிலை வந்தது, என்றார் அன்னிபெசண்ட்-திரு.வி.க.விடம்!

"வ உ. சிதம்பரம் பிள்னை என் சகோதரர்; அவர் தம் வசைமொழிகளை யான் வாழ்த்து மொழிகளாகவே கொண்டேன். என் மனம் புண்படவில்லை உலகுக்கும். நாட்டுக்கும் பல வழிகளிலும் நலம் புரிந்து வரும் ஒருவர் பொருட்டு என்போன்ற சிறுவர் வசை மொழிகளைத் தாங்குதல் பெரியதன்று என்று அம்மையார்க்கு திரு வி.க. ஆறுதல் கூறினார்.

அரசியல் துறையில் மட்டும் யான் தங்களைத் தலைவராகக் கொண்டவனல்லன். பல துறைகளில் தங்கள் அடிச் சுவட்டைப் பற்றி நடப்பவன்' என்றார் திரு.வி.க.

அதற்கு அன்னிப்பெசண்ட், "நீர் என் கட்டுக்கு அடங்குதல் வேண்டும் என்ற நியதி இல்லை; உமக்கு உரிமை உண்டு என்றார்,

"என்னைப் பொறுத்தவரையில் சட்ட மீறலை நாகரிகமாக நான் கொள்ள மாட்டேன். அது நாளடைவில் கொள்ளை, கொலை, புரட்சி முதலிய தீமைகளை நாட்டிலே புகுத்தி விடும்" என்ற தனது கருத்தை அம்மையார் வெளியிட்டதும் அவர் புறப்பட்டு விட்டார்!

வ.உ.சிக்கு ஆடுத்தபடியாக, அன்னிபெசண்ட் அம்மையாரை இந்திய அரசியல் உலகத்திலே இருந்து துரத்த முயன்றவர்களுள் டாக்டர் வரதராஜலு நாயுடும் ஒருவராக இருந்தார். ஆணால், வரதராஜலு 29.8.1918ல் திடீரென்று கைது செய்யப்படவே அவரது முயற்சி பிசு பிசுத்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு உலகுக்கு சில அறிஞர்களை வழங்கியது. அவருள் ஒருவர் டாக்டர் அன்னிபெசன்ட்