பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அன்னி பெசண்ட் அம்மையாரின்


பெங்களூர், விசயவாடா, காசி, ஆக்ரா, லாகூர் போன்ற பெரும் நகரங்களுக்குச் சென்று, சிறந்த உரைகளை ஆற்றினார்! அந்தந்த நகர் மக்கள் திரளாகத் திரண்டு வந்து அன்னிபெசன்ட் பேச்சுக்களைக் கேட்டு மகிழ்ந்தார்கள்.

இவற்றை எல்லாம் சிறப்பாக முடித்துக்கொண்டு, பிரும்மஞான சபையின் தலைமைக் காரியாலயம் உள்ள சென்னை மாநகர் அடையாற்றுக்கு வந்தார். சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பாக வரவேற்கப்பட்டார்.

இத்தியாவைப் பரவலாக ஒரு முறைச் சுற்றிப் பார்த்த அன்னிபெசண்ட், தான் புத்தகங்களில் படித்த இந்தியாவிற்கும், தற்போதுள்ள இந்தியாவிற்கும் இடையே-முரண்பாடுகள், வேற்றுமைகள் இருப்பதைக் கண்டார்.

ஆங்கிலேயர் வருகையாலும், ஆட்சியாலும்தான், பண்டைய இந்திய நாகரீகம், பண்பாடு, புழக்க வழக்கங்கள் எல்லாம் சீர்கெட்டடைந்து மாறி விட்டன என்பதை அவர் தேரில் கண்டு வருத்தமடைந்தார்.

பிரிடடிஷ் ஆட்சிக்குப் பணியாட்கள் தேவை என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட மெக்காலே கல்வி, வெறும் குமாஸ்தா கல்வி முறையாக இருப்பது கண்டு மிகவும் வருந்தினார். அதனால், இந்தியாவுக்கு ஏற்ற தேசியக் கல்வித் திட்டம் தேவை என்று சிந்தித்தார்.

சேன்னை அடையாறுப் பகுதியில் பிற்பட்ட வகுப்புக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் ஒன்றை ஆரம்பித்தார். அந்தப் பள்ளிக்கு ஆல்காட் தாழ்த்தப்பட்டோர் பள்ளி என்று பெயரிட்டார். இந்த ஆல்காட் தான் பிரும்மஞான சபை நிறுவனர் ஆவார்.


சென்னை இராயப்பேட்டையில் சகோதரர் சங்கம் சார்பில், பவானி பாலிகா பெண்கள் பாடசாலை ஒன்றையும் அன்னி பெசன்ட் ஏற்படுத்தினார்,