பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

29


அக் கட்டுரையில் கிறித்துவக் கொள்கைகனை மறுத்தார் என்றாலும், அவர் கடவுளை நம்புபவன் முட்டாள் என்று திட்டவில்லை: நாத்திகவாதம் நெடியே இல்லாமல் எழுதியிருந்தார்.


அன்னி மாதா கோவிலுக்குச் சென்று இன்றவழிபாடுகளில் கலந்து கொண்டார். என்றாலும், பிற கூட்டு வழிபாட்டிலோ, மற்றக் கோயில் நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்ளாமல் இருந்தார்.


இந்தக் காரணம், ஏற்கனவே மூண்டிருந்த கணவன் மனைவி எதிர்ப்புப் பிரச்னைகளுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல மோதியது. பூசலும் பிணக்கும் சேர்ந்து அவர்களது இணக்கத்தை முரித்தன! இந்த மனக் குமுறல்கள் இருவரிடையே நாளா வட்டத்தில் வளர்ந்தன.


மத குரு மனைவியே கோவில் சடங்குகளில் கலந்து கொள்ளாமல் இருந்ததை கிராம மக்கள் அவரிடமே சுட்டிக் காட்டி வாதம் செய்தார்கள்! இதை பிராங்க் தனது பணிக்குரிய ஓர் அவமானமாகக் கருதி வீட்டில் குழப்பம் செய்தார்! ஆனாலும், அன்னி இதைப் பொருட்படுத்த வில்லை.


மாதா கோவிலுக்கு அன்னி சென்றார்: மதச் சடங்குகளில் கலந்துகொள்ள அல்ல; இசைப் பயிற்சி பெற்றிட: ஆப்போது கோவிலில் யாரும் இல்லை! கோவில் கதவுகளைத் தாழிட்டார்!


கோவில் மேடை மீது ஏறினாள் யாருமே இல்லாத ஆரங்கத்திலே அன்னி பேசினார்! தங்கு தடை இல்லை! அவை நடுக்கம் இல்லை; சொற்கள் வானத்திலே இருந்து பொழியும் மழைபோல கொட்டின!