பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

அண்ணல் அதுமன்


(ஒலித்தார் - தழைத்தலையுடைய மாலை அமரர் - தேவர், கலித்தான் - வீர ஒலி செய்பவன், சிலை-வில்; வலித்தான் - மாட்டி இழுத்தான்; பகுவாய் - பிளவுபட்ட வாய்)

பழங்காலத்தில் திண்ணைப்பள்ளி ஆசிரியர், வளைந்த பிரம்பைக்கொண்டு சிறுவன் கழுத்திட்டுத் தன் பக்கம் வரும்படி இழுப்பதுபோல், அநுமன் வில்லின் நாணை சம்புமாலியின் கழுத்திலிட்டு அதனைச் சுழற்றித் திருகி இழுத்துக் கொன்று, அவன் உடலை மண்ணிடை வீழ்த்தினான். ஈண்டு மாருதியின் செருச் செய்யும் திறலைக் கண்டு வியக்கின்றோம்.

(5 பஞ்சசேனாபதிகள்" வதை : சம்புமாலி மாண்ட செய்தியை அறிந்த இராவணன் பெருஞ்சினம் கொண்டு தானே புறப்பட, சேனாபதிகள் அவனை விலக்கி, இசைவு பெற்றுப் பெருஞ்சேனையுடன் புறப்படுகின்றனர். அநுமன் பேருருவம் கொண்டு, சதுரங்க சேனை அடங்கிய அப்பெருஞ்சேனையைக் கடலில் வீழ்த்தி அழிக்கின்றான்." சேனைகள் அழிந்ததும் சேனாபதிகள் மாருதியை நெருங்கு கின்றனர். அவர்கட்கும் இவனுக்கும் நடைபெறும் கடும் போரில் ஐவரும் ஒருவர்பின் ஒருவராக மாளுகின்றனர்.” ஐவரும் அநுமனால் இறந்தமைபற்றிக் கவிஞன்,

"வெஞ்சின அரக்கர் ஐவர்

ஒருவனே வெல்லப் பட்டான் அஞ்செனும் புலன்கள் ஒத்தார்

அவனும்நல் அறிவை ஒத்தான்."" 26. பஞ்சசேனாபதிகள் - விருபாட்சன், யூபாட்சன், துர்த்தரன், பிரகணன், பாசகர்ணன் என்ற பெயரினர்.

27. பஞ்சசேனாபதி வதை - 39.

28. பஞ்சசேனாபதி வதை - 50, 54 57, 63.

29. பஞ்சசேனாபதி வதை - 64.

  • அக்க குமாரன் - அட்சகுமாரன். இவன் இராவணனுக்கு மகன். இவனைப்பற்றிக் கம்பனில் குறிப்பு இல்லை; அபிதான சிந்தாமணி யிலும் இராவணகுமாரன் என மட்டுமே உள்ளது. அதிகாயன் இறந்தபோது தானிய மாலி (தாய், இராவணன் மனைவி) புலம்புவதைப் போலவும், மேகநாதன் மரித்த போது மண்டோதரி புலம்புவது போலவும் எந்த மகளிரும் புலம்பவில்லை. தேய்ப்புண்ட
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/89&oldid=1511882" இலிருந்து மீள்விக்கப்பட்டது