பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 அண்ணல் அநுமன்,

(6) பிராட்டியைத் தேடிவந்த அநுமன் பிராட்டியைக் கண்டு ஆற்றவேண்டிய அனைத்தையும் நிறைவேற்றிய பிறகு இராவணனைக் கண்டு இராமனுடைய பலத்தை அவனுக்குப் புலப்படுத்த விழைகின்றான் அதற்கு உத்தியாக அசோக வனத்தை அழிக்கத் தொடங்குகின்றான். அழித்தால் தடுக்க இராக்கதர் பலர் வருவர்; அவர்களைக் கொன்று குவித்தால் இறுதியில் இராவணனைக் காண வாய்ப்பு ஏற்படும் என்பது அவனது திட்டம். சீதாப்பிராட்டி இருந்த மரத்தைத் தவிர அநேகமாக அனைத்து மரங்களையும் அழித்துவிட்டுத் தனியாக நிற்கின்றான்.

"ஏழினொடு ஏழு நாடும்

அளந்தவன் எனலும் ஆனான், ஆழியின் நடுவண் நின்ற

அருவரைக்கு அரசும் ஒத்தான் ஊழியின் இறுதிக் காலத்து

உருத்திர மூர்த்தி ஒத்தான்."" (அளந்தவன் - திரிவிக்கிரமன், அருவரை மந்தரமல்ை ஊழி - கற்பாந்த காலம்)

இப்போது தனியே நின்ற அநுமனுக்கு மிக்க பேருருவம் கொண்டதனால் திரிவிக்கிரம மூர்த்தியும், கடலைக் கலக்கியத்ால் மந்தரமலையும், எல்லாவற்றையும் அழித்து நிற்றலால் உருத்திரமூர்த்தியும் உவமையாயினர். இங்குப் பேருருவம் கொண்டது ஆறாவது பேருருவம் ஆகும்.

(7) கிங்கரர், சம்புமாலி ஆகியவர்களையெல்லாம் வதைத்துவிட்டு அநுமன் சிறிய வடிவத்துடன் அசோக வணிகையின் தோரண வாயிலில் அமர்ந்திருக்கையில் பஞ்சசேனாபதிகள் படையைத் திரட்டி அணிவகுத்துக் கொண்டு வருவதைக் காண்கின்றான். வந்தவர்களுள் சில படைவீரர்கள் "புன்றலைக் குரங்கு போலும் மால் அமர்; வென்றது விண்ணவர் புகழை வேரொடும், தின்றவல் அரக்கரைத் திருகித் தின்றதால் " என்று அயிர்க்கின்றனர். அரக்கர்கள் அயிர்த்ததைக் குறிப்பினால் உணர்ந்த கற்றுனர் மாருதி உடனே பேருருவம் கொள்ளுகின்றான். "மீயுயர்

15. சுந்தர. பொழிலிறுத்த - 46. 16. சுந்தர. பஞ்சசேனாபதிகள் வதை - 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/71&oldid=1507457" இலிருந்து மீள்விக்கப்பட்டது