பக்கம்:அன்னை தெரேசா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. சகோதரி ரொஸாரியோ போன்ற பன்னிரண்டு கன்.ை கையர் அன்னையின் தெய்வப்பணிக்கு - கடையரினும்: கடையருக்குரிய அன்பின்பாற்பட்ட தெய்வத் திருப் பணிக்குத் தோள் கொடுத்துத் துணை நின்று, அவர்கள் பன்னிருவரும் அன்னையின் முதல்கட்ட நடைமுறைப் பணி முறையில் அன்னேயின் நிழல் ஆளுர்கள். இவர்கள் அத்தனை பேரும் ஆசிரியை தெரேசாவின் முன் நாளைய மாணவிகள்; இப்போது அவர்கள் அனைவரும் புனிதத் தாயின் தவப் புதல்விகள் ஆயினர்! - வறுமைப் பசியிலிருந்து கடை மக்களை விடுதலை அடையச் செய்யவும், தெய்வப் பணியில் பணிவுடன் சரண் அடையவும் விரதங்கள் எடுத்தனர்! 'அன்பின் தூதுவர்கள்’ அமைப்பில் இன்றைய நிலையில் கன்னிச் சகோதரிகளுக்கென 227 பிரிவுகள் இயங்கி வருகின்றன! - வேறெந்த உலக அமைப்பிலும் காண முடியாத அளவுக்கு இங்கே கட்டுத்திட்டங்கள் கடுமை யாகவே அமல்நடத்தப்படுகின்றன. மோதிஜில் சேரிப்பகுதியை அடுத்து, இப்பொழுது தவல்ஜா என்னும் சேரிப்புறத்திலும் மற்ருெரு பள்ளியைத் தொடங்கினர் அன்னையார். அன்பின் தூது, சருக்கம் சருக்கமாகவும், படலம் படல மாகவும், காண்டம் காண்டமாகவும் வளர்கிறது; விரிகிறது: அந்த நாட்கள்...! அன்னை தெரேசா பலப்பல ஆண்டுக்காலமாக மானுடப் பண்பின் ஊனும் உயிரும் உருகிடப் பிரார்த். தித்துக் கனவு கண்டுவந்த கடையரினும் கடையருக்காக அன்புப்பணி அன்று ஆரம்பமாகவும், அதுவே இன்று பேரியக்கமாக வளர்ந்து, உலகெங்கணும் அன்பின் தொண்டர்கள் உலகத்தின் அமைதியைப் பேணவும், மக்களின் நலனைக் காக்கவும் கூடிய அமைப்பாகப் பேரும் புகழும் பெற்று விளங்கி வரவும் செய்த அந்த நாட்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/71&oldid=736385" இலிருந்து மீள்விக்கப்பட்டது