பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

85


மூர்த்தி மிட்டாதார் மகளையல்லவா தருகிறார்: எல்லாருமே வர்றதா ஒதுக்கிட்டோமே!” என்று, சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டார் அய்யா!

எனக்கு எப்படியிருக்கும்? கிட்டத்தட்ட ‘ஓ’ என்று. அழுதுவிடும் நிலைமை! ஏமாற்றத்தை எப்படித் தாங்கு வேன்? அய்யாவே என் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு— “எப்படியும் ஒத்துக்கிட்ட நிகழ்ச்சியெ நான் தவற மாட்டேன்னு ஒனக்குத் தெரியும்; நீயே அதை விரும்ப மாட்டேன்னு எனக்கும் புரியும் ! ஒண்ணு செய்! நம்ம அண்ணாத்தொரெய நீ கூட்டிக்கிட்டுப் போயிடு!” என்றார்கள்.

சிறிது நேர மவுனத்துக்குப் பின்னர், கண்களைத் துடைத்தவாறு, ‘சரிய்யா’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். அண்ணா அன்றைக்குத் திருச்சியிலிருக்கிறார் என்பது தெரியும். “கே. ஆர், ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபா” திருச்சியில் முகாமிட்டிருந்தது. அங்கு மேனேஜராகச் சிறிது காலம் அண்ணாவால் அனுப்பப் பட்டுக், குடும்பத்துடன் வாழ்ந்த சம்பத், டைபாய்ட் சுரத்தினால் தாக்கப்பட்டு, ஈரோடு திரும்பியிருந்தார். துணைவி சுலோச்சனா, கைக் குழந்தை நாகம்மா ஆகியோருடன். அவர் சொன்னார் உடனே போய் அண்ணாவைப் பாருங்கள் என்று.

மே மாதம் தூத்துக்குடி மாநாட்டுக்கு அண்ணா போகாமல், அவர்மீது களங்கம் கற்பிக்கப்பட்டு, பின்னர் அய்யா-அண்ணா ஊடல் ஒரளவு சரியாகியிருந்த காலம் அது. திருச்சிக்கு ரயிலேறிச் சென்றேன். வழக்கப்படியே அண்ணா சங்கரன் பங்களாவில் தங்கியிருந்தார். சங்கர னுடைய தம்பி, சாம்புவிடம் விவரத்தைச் சொன்னேன். அண்ணாவிடம் அழைத்துப் போனார்.

எனக்குத் திருமணம் என்றதும், நகைப்போடு என்னைத் தட்டிக் கொடுத்த அண்ணா, தேதியைக்