பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஞ்சா நெஞ்சன் 97

செலுத்துகின்றான். வீடுதோறும் தாவிச் சென்றதால் நகரம் முழுவது தீயினால் அழிந்தொழிந்தது."

இராவணனின் அரண்மனையும் எரிந்து நாசமா கின்றது. இராவணன் சினந்து குரங்கைப் பிடித்து வரும்படி கட்டளையிட இராக்கத வீரர்கள் இலங்கை முழுதும் தேடிச் சென்று அதுமனைக் காண்கின்றனர். அவர்கள் அனைவரையும் தன் வாலினால் வளைத்துப் பம்பரம் விடுவதுபோலச் சுழற்றி வீசி அழிக்கின்றான். முன்னர் பஞ்ச பூதங்களுள் ஒன்றான நீர் (வருணன்) அணை கட்ட உதவியது: இப்போது மற்றொரு பூதமாகிய தீ (அக்கினி பகவான்) இலங்கையை அழித்தது. இராகவன் துணை இருக்க, அதுமனை இராவணனால் என்ன செய்யமுடியும்?

(9) இராம - இராவணப்போர் நிகழ்ந்தபோது : இந்தப் போர் நிகழ்ந்தபோது பல்வேறு நிலைகளில் அநுமன் மேற்கொண்ட பங்கினால் அவனது வீரப்பண்பையும் அஞ்சா நெஞ்சினையும் காண முடிகின்றது.

(1) முதற்போரில் ஒருநிலையில் சுக்கிரீவன் இராவண னுடன் போருடற்றும்போது சலிப்பெய்துகின்றான். அப்பொழுது அதனைக் கூட இருந்து அறிந்தவன் போல் மேலை வாயிலிலிருந்து அநுமன் வந்து இராவணனுடன் போர் புரிகின்றான். முதலில் ஒரு மலையைப் பெயர்த் தெடுத்துக் காலின் தோன்றல் இலங்கை நாதன்மீது வீசி எறிகின்றான். இராவணன் ஒரு கணையை ஏவி அதனை ஆயிரம் துண்டுகளாகுமாறு செய்துவிடுகின்றான். மாருதி மீண்டும் ஒரு மலையைப் பறித்து வீச அஃது இராவணன் தோளிலணிந்த வாகுவலயத்தைத் தாக்கி, அதனைப் பொடி யாக்கித் தானும் பொடியாகிவிடுகின்றது. பொற்றோள், பூட்டிய வலயத் தோடும் பூழியாய்ப் போயிற்றன்றே. * மீண்டும் ஒரு மலையைப் பறிக்க அநுமன் முயலும்போது இலங்கை நாதன் அவன் கையிலும் தோளிலும் பத்து அம்புகளை அழுத்துகின்றான். அவற்றை அநுமன் சலியாமல் தாங்கி நிற்கின்றான். அதனைக் கண்ட தேவர்கள் அநுமன்

52. சுந்தர. பிணிவீட்டு - 136, 137. 53. யுத்த முதற்போர் - 135

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/98&oldid=1360822" இலிருந்து மீள்விக்கப்பட்டது