பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 அண்ணல் அநுமன்

(காவல் நாட்டங்கள் - தன்னைச் சரண் அடைந்தவர்களைப் பாதுகாக்க வல்ல கண்கள்; கனன்றான் - கோபித்தான்)

நெருங்கிச் சென்று நோக்கியபோது பத்துத் தலைகளும் இல்லை; இருபது தோள்களும் இல்லை. சினம் தணிந்து போகின்றது.

"மறுகி ஏறிய முனிவுஎனும்

வடவைவெங் கனலை அறிவு எனும்பெரும் பரவை,அம்

புனலினால் அவித்தான்' (மறுகிய - மாறுபடக்கருதிய முனிவு - கோபம்; வடவை - படமுகாக்கினி, பெரும்பரவை-பெருங்கடல்)

பிறகு, அவ்விடத்தை விட்டு நீங்கினான்.

"அவித்து நின்றுஎவன் ஆயினும்

ஆகவென்று அங்கை கவித்து நீங்கிடச் சிலபகல் என்பது கருதாச்

அனையவன்

உறையுளைக் கடந்தான்'

‘இவன் எவன் ஆயினும், இருக்கட்டும் என்று உதாசீனமாகச் சொல்லி, இவன் அழிதற்கு இன்னும் சில நாள்களே உள்ளன என்று சிந்தித்து அவன் இருப்பிடத்தை விட்டு அகன்றான். இப்பொழுதே இராம-இராவணப்போர் இவன் சிந்தனையில் எழுகின்றது; இவ்வரக்கன் முடிவும் சில நாள்களில் முடியும் என்றும் இவன் மனம் எண்ணுகின்றது.

வீடணன் : பல இடங்களிலும் பிராட்டியைத் தேடிக்கொண்டு வருபவனாகிய ஏந்தல் ( = அநுமன்),

"வேந்தர் வேதியர் மேலுளோர்

கீழுளோர் விரும்பப்

6. சுந்தர. ஊர்தேடு - 131 7. கந்தர. ஊர்தேடு - 132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/51&oldid=1360587" இலிருந்து மீள்விக்கப்பட்டது