பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமபக்தன் 141

(எண்வகை மூர்த்தி - எட்டுப் பொருள்களைச் சரீரமாக உடைய சிவபெருமான், துளக்கி - சலிக்கச்செய்து)

இராவணன் சிவபெருமானுடன் கைலாய மலையைத் துக்கினவனாயினும், இலக்குவன் விட்டுணுவின் அமிச மாதலால், அவ்விராவணனால் துக்க முடியாதவனாயி னான். விட்டுணுவின் சொரூபம், பக்தர்க்கு அன்றி மற்றை யோர்க்குப் பெரும் பாரமாகத் தோன்றும்.

பாவேந்தர் காதலின் ஆற்றலைக் குறிப்பிடும்போது, வஞ்சி தன் கோவை உதடு திறந்து சிரிக்குமுன் "குப்பன் பறந்தான் பருவத மேல் பாங்கியைத் துக்கியே என்று காட்டி,

"கண்ணின் கடைப்பார்வை

காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு

மாமலையும் ஒர்கடுகாம்" " என்ற அடிகளையும் சான்றாக்குவர். காதலுக்கு இருக்கும் ஆற்றலைவிடப் பன்மடங்கு ஆற்றலுடையது பக்திக் காதல், இராவணன் இளையபெருமாளைத் தூக்க முயன்று வெய்துயிர்த்து நிற்கும் நிலையில், எங்கோ ஒரு மூலையி லிருந்த அநுமன் ஒடோடி வந்து, இளையபெருமாளை ஏந்தி எடுத்துத் தடுக்க முடியாத விரைவுடனே அப்பாற் சென்று

"தொகஒ ருங்கிய ஞானம்ஒன்று

எவரினும் தூயான் தகவு கொண்டதோர் நண்பெனும் தனித்துணை அதனால் அகவு காதலால் ஆண்டகை

என்னினும் அநுமன் மகவு கொண்டுபோய் மரம்புகு

மந்தியை ஒத்தான்' " (தொக ஒருங்கிய - தொகுதியாகச் சேர்ந்துள்ள, ஞானம் ஒன்று - ஞானம் பொருந்திய தகவு - நன்மை; மந்தி - பெண் குரங்கு)

31. சஞ்சீவி பர்வதத்தின் சாரல். 32. யுத்த முதற்போர் - 213

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/142&oldid=1361326" இலிருந்து மீள்விக்கப்பட்டது