பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

பால்சாக் என்ற உலகப் புகழ் பெற்ற பிரஞ்சு எழுத்தாளன் மிகுந்த வறுமை நிலையில் வாழ்ந்தான். எனினும், எழுத்தினால் உலகத்தை வெல்வேன், வரலாற்றுப் புகழ் பெறுவேன் என்ற நெஞ்சுறுதி அவனுக்கு இருந்தது. அவன் அமர்ந்து எழுதும் இடத்தில், பார்வையில் படுகிறபடி, 'உலகத்தை வானினால் வென்றான் நெப்போலியன்; பேனாவினால் நான் வெல்வேன்' என்று எடுப்பாக எழுதி வைத்திருந்தான். எழுத உட்காரும் போது அதை மந்திரம் போல் உச்சரித்துக் கொண்டு உழைத்தான். மாபெரும் வெற்றி கண்டான்.

அது தான் ‘ஸ்பிரிட்’ — மெய்த்துணிவு; உள் வேகம்; உண்மையான ஊக்கம் ஆகும்.

உள்ளம் தேறிச் செய்வினையில்
ஊக்கம் பெருக உழைப்போமேல்
பள்ளம் உயர் மேடாகாதோ?
பாறை பொடியாய் போகாதோ?

“ஊன்றி உணர்தற்கு உரிய உண்மை” என்று ஒரு கவிஞர் குரல் கொடுக்கிறார் இப்படி.

வாழ்க்கைப் பாதையில் முன்னேற விரும்புகிற ஒவ்வொருவரின் இதய ஒலியாக இது அமைதல் நன்று.

 

Printed at SCTP - PRESS Christianpet.