பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

20

குமரியின் மூக்குத்தி

கன்றுக்குட்டி பிறந்து ஆறு மாதங்களே ஆகின்றன. அவள் கண்முன்னாலே பிறந்தது அது. இப்போது அது தேய்ந்து, மாய்ந்து கொண்டிருந்தது.

"கன்றுக்குட்டிக்குப் பால் விடாமல் கறப்பது பாவம்!" என்று அவள் பாலகிருஷ்ணனிடம் சொல்லிப் பார்த்தாள். அவன்,"சரிதாண்டி போடி; கன்றுக்குட்டிக்குப் பால் வாசனை போதாதோ? அதுதான் புல்லையும் தவிட்டையும் தினமும் ஒரு ரூபாய்க்கு மேல் தின்கிறதே!" என்று சொல்லிவிடுவான். அவள் அதற்குமேல் பேசமாட்டாள்.கன்றுக்காகத்தான் பசுவினிடம் கடவுள் பாலை உண்டாக்கி யிருக்கிறார். என்ற தத்துவத்தை எடுத்துச் சொல்ல, அவள் அரசியல்வாதி அல்லவே? அப்படி எடுத்துச் சொன்னாலும் பாலகிருஷ்ணன் கேட்கப் போகிறானா, என்ன?

  *            *                  *

பாலகிருஷ்ணனுடைய தாய் பக்கத்துவீட்டுக்காரி யோடு குறைப்பட்டுக் கொண்டாள்,"என்னவோ, இந்தப் பெண் வந்து நாலு வருஷ காலம் ஆகிவிட்டது. இன்னும் ஒரு பிஞ்சுவிடவில்லை. எனக்கோ வயசாகி விட்டது. காடு வா வா என்கிறது. பசுமாட்டையும் கன்றுக் குட்டியையும் பார்க்கிறபோதெல்லாம் இந்த வீட்டிலே ஒரு குழந்தை விளையாடவில்லையே என்ற துக்கம் பொங்குகிறது" என்றாள்.

"என்ன.அதற்குள்ளே அவசரம் நல்லம்மாளுக்கு அப்படி என்ன வயசாகிவிட்டது? அவளுக்கு இனிமேல் குழந்தைபிறக்காமலேபோய்விடுமா?" என்று கேட்டாள் அடுத்த வீட்டுக்காரி.

"அவளுக்கு;வயசாகவில்லை;அவசரமும் இல்லை. எனக்குத்தான் அவசரமாக இருக்கிறது. பேரனை மடியில் - வைத்துக் கொஞ்சுவதற்குள்ளே “நான் கண்ணை மூடிக் கொண்டால்--" அவள் பெருமூச்சுவிட்டாள்.

“அப்படி எல்லாம் பேசாதே! நீ - வீடு கொள்ளாத பேரன் பேத்திகளைப் பார்த்துச் சந்தோஷமாக இருக்கப்