பக்கம்:கண்ணகி தேவி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

17

கவுந்தி, "இவர்கள் மதனும் இரதியும் அல்லர்; என் மக்களே இவர்கள் வழி நடந்து வருத்த முற்றிருக்கின்றனர். இவர்கள் பக்கம் செல்லாது போய்விடுங்கள்," என்று கூறினள். அதனேக் கேட்ட அவர்கள் "தவத்தீர், ஒரு வயிற்றிற்பிறந்தோர் கணவனும் மனைவியுமாய்க் கூடி வாழ்தல் முறையென்று உங்கள் சாத்திரம் உரைக்கின்றதோ!" என்று பரிகசித்தனர். அவ்வளவில் கவுந்தி, "இவர்கள் முள்ளுடைக் காட்டில் முது கரியாக!" என அவர்களேச் சபித்தாள்.

‘குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்த லரிது.’

என்றபடி கயவராகிய அவ்விருவரும் உடனே நரிகளாய் ஊளையிட்டனர். இதனைக் கண்ட கண்ணகியும் கோவலனும் மருண்டு இரக்கமுற்றுக் கவுந்தி யைத் தொழுது,

‘நெறியி னீங்கியோர் நீரல கூறினும்
அறியா மையெண் றறிதல் வேண்டும்.’

இனி இவர்கள் சாபநீங்கி உய்தலான காலத்தை அடிகள் அருள வேண்டும்,” எனப் பணிவுடன் வேண்டினர். அதற்குக் கவுக்தி, “இவர்கள் பெறுதற்கரிய மக்களுடம்பை ஒரு குறும்பு மொழியால் இழந்து, இழிபிறப்புற்றனர். ஓராண்டளவும் உறையூர் மதிற் புறத்துக் காவற் காட்டில் திரிந்து துன்பம உழந்த பின்னரே இவர்கள் முன்னே உருவம் பெறுவாராக!” எனச் சாபவிடை செய்தனள்.

தென்கரையிலுள்ள உறையூரில் அன்றிரவு உறைந்து, வைகறையில் தென்றிசை கோக்கிப் புறப்பட்டு, ஒரு சோலையிலுள்ள மண்டபத்தில் தங்கினார்கள். அம்மண்டபத்தில், குடகமலையின் அருகிலுள்ள மாங்காடு என்னும் ஊரிலிருந்து யாத்திரையாக2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/25&oldid=1410953" இலிருந்து மீள்விக்கப்பட்டது