பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 7

இருண்ட கானகத்திலே மட்டுமா அவை உள்ளன

இருண்ட என் சமுதாயத்திலும் அவை மலிந்து கிடப் பதைக் கண்டிருக்கிருய்!

அதனுல்தான் அவற்றைத் திருத்த சந்தன மரம்போன்ற உயர்ந்த பண்புகளைப் பரப்பி நீ சமுதாயத்தை மனம் கமழச் செய்கிருய் என்று எண்ணுகிறேன்.

இந்த உன் செயலும் ஒரு சமுதாய சீர்திருத்தந்தானே?

இன்றேல் துரங்குமூஞ்சிகளைத் தட்டி எழுப்பி வேம்பு மூலம் சித்த வைத்தியம் செய்திருப்பாயா?

புன்னேப் பூஅேழகானது என்ருலும்; சிறு காற்றையும் தாங்க முடியாமல் தலே கவிழ்ந்து கீழே உதிர்வ்தைப் போன்ற என் சமுதாய பலவீனர்கட்கு வயிரம் பாய்ந்த தேக்கின் பலத்தையும்-வளத்தையும் வழங்கிட நினைப்பாயா நீ?

அவற்றின் உடல்களை ஆரோக்கிய முறையிலே வளர்க்க சந்தனக்காற்றை ஊட்டுவது ஏன் என்பதை அறிந்தேன்.

மூங்கில் மூலமாக இசையை எழுப்பி, அவர்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளிக்கிருய்.

இவையும் சீர் தி ரு த் த ம ல் ல வ ? பொதுநலத் தொண்டல்லவா?

தென்றலே: இந்த உதவிகளை இருண்ட காட்டுக்கு மட்டுமா செய்கிருய்? நோய்வாய்ப்பட்ட் என் சமுதாயத் திற்குமன்ருே கூலிபெருமல் புரிகிருய்!

நீரன்ருே நீனிலம் புகழும் சீர்திருத்தவாதி உன் சேவை நீடு புகழ் வாழ்க! வளர்க நின் கடமை உள்ளம்.

சிறுகாலே!சந்தனக் காட்டிலே நீதவழ்ந்து வரும்போது பூ'ன்ை அணைக்கிருய்!

'பூ' என்ருல், பூமி, உலகம்தானே! பூவான பூமியைஉலகத்தை நீ கட்டி அணைக்கிருய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/111&oldid=564555" இலிருந்து மீள்விக்கப்பட்டது