பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

窓会7

உனது கம்பீரமான தோற்றத்தை, நான் போகின்ற ஆற்றின் பாதையில் கண்டேன்! மெய்சிலிர்த்தேன்!

என் ஜீவயாழ் உன்னைப் பாடிக் கொண்டே செல்கின்றது: அந்தப் பாட்டு உன் இலட்சியத்தின் மீது கட்டப்பட்டது

விடுமுறை நாட்களில் ஓய்வு பெற வந்த சிறுவர்கள் என் அழகைப் பார்த்து சிரிக்கின்றனர்!

ஒரு தீராத விளையாட்டுப் பையன் தன் காகிதக் கப்பலே என் மீது மோதினுன்!

நான் கப்பலோடு சேர்ந்த வண்ணமாய் வேகமாகச் செல்கின்றேன்.

சிறுவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி அதே நேரத்தில் எனக்கு எத்தனை அதிர்ச்சி! அப்போது ஒருகவிஞன் இருந்தால்: அதுதானே கவர்ச்சி!

உன் அறிவின் ஆழம்போல, ஒரு ஆழமான இடத்தில் நான் மீண்டும் தலை குப்புற விழுந்தேன்!

என்னுடன் வந்த காகிதக் கப்பலும் விழுந்தது!

அதன் மீது எழுதப்பட்ட எழுத்துக்கள் நீரால் கரைந்தன.

ஒரு காலத்தில், இந்த நாட்டின் மானம் எழுதப்பட்ட பத்திரமாக அது இருந்தது.

அதை எடுத்து சில சிறுவர்கள் கப்பல் செய்து விட்டு விட்டனர்.

அந்த எழுத்துக்கள் நீரில் கரையும் போது, என் மனமும் கரைந்து கண்ணிர் பொங்க ஆரம்பித்தது.

தாயே! இதுவும் உன் திருவிளையாட்டா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/148&oldid=564592" இலிருந்து மீள்விக்கப்பட்டது