பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

கூட்டத்திலே குழுமியுள்ள மக்களது உள்ளத்தையெல் லாம் நீ சிவிர்க்க வைக்கிருய்! கவருகிருய்! கொள்ளை கொள் கிருப்.

இதற்குக் காரணம் என்ன? உன் மீதுள்ள எல்லேயற்ற பற்று நீ வாடையா என்ன வெறுப்பதற்கு? தென்ற வல்லவா?

நீயும் தமிழ் மண்ணிலே பிறந்து நடமாடுகின்ற வனல்லவா? அதனுல்தான் தமிழ் உணர்வோடு, கூடியிருக் கின்ற பல லட்ச மக்களின் உள்ளங்களிலே இரண்டறக் கலக்கும் பண்பு பெற்றிருக்கிருய் வளர்கின்ற செந்நெல் லுக்கு மடைப்புனல் எப்படி அவசியமோ, அதைப்போல வளர்கின்ற ஒரு சமுதாயத்திற்கு முதியவர்களும் அவசிய மாகும்.

சமுதாய வளர்ச்சி சரியானதுதான என்பதை அறிய கற்ருேர்களும் மற்ருேர்களும் அவசியம்.

மடைப்புனல் நீரை எப்படி முறையாக அனுப்பி செந்நெல்லுக்கு உரம் ஊட்டுகிறதோ, அதேபோல பொது மக்களும் ஒரு சமுதாய வளர்ச்சிக்கு அவசியம்.

இதை தெளிவற உணர்ந்ததால் தென்றலே நீ பொது மக்கள் உள்ளங்களிலே எல்லாம் புகுந்து கருத்துக் குளுமையைத் தவழவிடுகிருய்!

இளமுல்லை போன்ற வீராங்கனைகள் உள்ளத்திலும் நீ புகுந்து உணர்ச்சிப் பிழம்பைத் தட்டி எழுப்புகிருய்.

வீரத்தை அவர்களிடையே விளையாட விடுகிருய் வாழ்க நீ வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/121&oldid=564565" இலிருந்து மீள்விக்கப்பட்டது