பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 பெரும்பாலான கோயில்களில் குளம் இருந்தது. சதுர மாகச் சுற்றிலும் படிக்கட்டுக்களுடன் அது அழகாகவும் குளிர்ச்சியாகவும் விளங்கிற்று. ஒரு குளத்தின் மறுபக் கத்திலே ஒரு சிலையைப்போல ஒரு கணம் ஏதோ ஒன்று ஜூடிக்கு தோன்றிற்று. அதுதான் அந்தக் கோயிலுக்குச் சேர்ந்த பெரிய யானையென்று அவள் தெரிந்துகொண்டாள். அதன் வெற்றியிலும் கன்னங்களிலும் சாம்பல் கிறத்திலும் கோலம்போல வரையப்பட்டிருந்தது. அது பழகிய பெரிய யானையென்ருலும் காட்டுப்புற்களுக் கிடையே திரியும் காட்டு யானைகளைப் போல அவ்வளவு அழகாக இல்லை. பெரிய கோபுரங்களின் குளிர்ச்சியான வளைவுகளுக் கிடையே சிறுசிறு கடைகள் இருந்தன. சாதாரண விஜன் பாட்டுச் சாமான்கள், தெய்வங்களின் வடிவங்களான செலுலாய்டு பொம்மைகள், தெய்வப்படங்கள், அரசியல் வாதிகளின் படங்கள் இப்படி எல்லாவற்றையும் கலந்து அங்கே வைத்திருந்தார்கள். வர்ணம் நிறைந்துள்ள அப் படங்கள் சில சமயங்களில் ஜிகிஞ. வேலேயுடனிருக்கும்; சில சமயங்களில் சினிமா நட்சத்திரங்களைப் போலக் காணப்படும். ஆனல் அவற்றைப் பற்றி மக்கள் கவலைப் படவில்லை. அங்கே எப்பொழுதும் பிச்சைக்காரர்கள் உண்டு. சில சமயங்களில் அவர்கள் அங்கே வந்து கேட் பார்கள்; சில சமயங்களில் உட்கார்ந்தே இருப்பார்கள். ஒரு கோவிலில் காலை உயரத் தூக்கிக்கொண்டிருக்கும் சிவனுடைய உருவம் ஒன்று இருந்தது. பார்வதி தன் கணவனை சிவனை கடனப்போட்டிக்கு அழைத்த கதையை அம்மணிப்பாட்டி ஜூடிக்குச் சொன்னுள். சிவன் தமது காதணியைக் கீழே விழச் செய்து பிறகு அதைக் கால்விரல் களாலேயே எடுத்துக் காதில் அணிந்து கொண்டார்.