பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பதங்களின் சரித்திரம். டாக்டர் டிரென்ச்(Dr. Trench) என்னும் ஆங்கிலவித்வான் தான் எழுதிய ஒர் புத்தகத்தில் " ஒரு பாஷையிலுள்ள பதங்களை எடுத்துக் கொண்டு, அவைகளை ஆராய்வோமாயின், அப்பாஷை பேசுபவர் களுடைய பூர்வீக நாகரீகம் முதலியவற்றைப் பற்றி நமக்கு அப்பதங் கள் அநேக விஷயங்களைத் தெரிவிக்கும் ' என்று கூறியுள்ளார், இதன்பிரகாரம் சில தமிழ் மொழிகளை எடுத்துக்கொண்டு தமிழர் களுடைய பூர்வீக நிலை முதலியவற்றைப் பற்றி அவைகள் நமக்கு என்ன தெரிவிக்கக் கூடும் என்று பார்ப்போம். - (6) தமிழ். முதலில் தமிழ் என்னும் மொழியையே எடுத்துக் கொள்வோம்; இது நமது தாய் பாஷையின் பெயர் : தமிழ் என்பது இயற்பெயராக அமைந்தது என்று சிலர் கூறுகின்றனர், அதாவது இது ஒரு காரணப்பெயரல்ல. ஆகவே, அதற்கு அர்த்தம் கூறப்புகில் பிரயோசனமற்ற காரியம் என்று நினைக்கின்றனர். இப்பாஷைக்கே உரிய ழகரம் கூடிய சொல்லாதலேயே இதற்கு ஒரு நியாயமாகக் கொள்கின்றனர். டாக்டர் போப் எனும் தமிழ் அறிஞர் தென் -மொழி =தென்மொழி தெற்கு தேசத்தில் பேசப்பட்ட பாஷை தென்மொழி தமிழ் என மாறியது என்று எண்ணுகிருர். வடமொழி என்பது சமஸ் கிருதத்தைக் குறிப்பதால் தென்மொழி என்பது இப்பாஷையைக் குறிப்பதாம், என்பர். இன்னும் சிலர் ஒரு ஜாதியார்க்கோ, அல்லது. அவர்கள் பாஷைக்கோ அவர்களே பெயர் வைத்துக்கொள்வது வழக்க மன்று, ஏனையர் தாம் அவர்களுக்கும் அவர்களுடைய பாஷைக்கும். பெயரிடுவது வழக்கம். வடமொழியார் தமிழ் நாட்டை திராவிடமென்று அழைத்திருக்கின்றனர், பூர்வீக சம்ஸ்கிருத நூலாசிரியராகிய பாணினி யும் திராவிடம் என்று இந்நாட்டைக் குறித்திருக்கின்றனர், திராவிடம் எனும் இப்பதம் பிராகிருதபாஷையில் தமிளம் என்ருயது, அதிலிருந்து தமிழ் என்ருயது, என்று எண்ணுகின்றனர். திராவிடத்தின் பாஷை திராவிட பாஷையாம், டாக்டர் கால்ட்வெல் துரை இவ்வாறு நினைக் கின்றனர். பழைய சரித்திர ஆராய்ச்சி செய்த பி. டி. பூரீனிவாசாச் சாரியாரும் இவ்வாறே எண்ணுகின்றனர். இதற்கு நேர் விரோதமாக தமிழ் எனும் மொழியே திராவிடம் என மாறியது என்பார் சிலர் : டாக்டர் ஆபர்ட்துரை திருமன்றம் என்பது சிதைந்து, திரிமளிப், தமிழ் என்ருயது என்று கூறியுள்ளார். மற்றும் சில வித்வான்கள் தமிழ் என் ருல் இனிமை என்று அர்த்தம். ஆகவே, இது மிகவும் இனிமையான