பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பூஜாக் கிரஹமும், பூஜிக்கப்படும் விக்ரஹங்களோ, படங்களோ இல்லா விட்டால், சாயங்காலங்களில் குத்து விளக்கையேற்றி, அதன்முன் பெண்டிர் தொழுவதைக் காணலாம். இப்பழக்கத்தினின்றும், திரு வுளச் சீட்டு திருஉள்ள+சீட்டு (ஸ்வாமி பின் உள்ளத்தை யறியும் சீட்டு) வந்திருக்க வேண்டும். திருஉள்ள சீட்டு போய் திருவிளக்குச் சீட்டாகியது. (12) ஐம்பால் என்ருல் மகளிர் கூந்தல் என்று அர்த்தம், பூர்வ காலத்தில் தமிழ்நாட்டுப் பெண்கள் தங்கள் கூந்தலை ஐந்துவிதமாக (கொண்டை, சுருள், குழல், பணிக்கை, முடி) கட்டிய வழக்கத்தினின் றும் இப்பெயர் வந்தது என்பது நிச்சயம். (1) மட்டிப்பால் இது மட்டுப் பால் என்பதின் மருவாம். மட்டு என்ருல் வாசனை. மட்டுவார் குழலி ' என்பதைக் காண்க. இதையறியாது மட்டுப்பால் என்கிற பதம் மட்டிப்பால் அல்லது மட்டு சாம்பிராணி என்பதும் மட்டி சாம்பிராணி ஆயினதைக் கவ னிக்க இதனின்றும் மட்டி என்ருல் மடையன் என்கிற பொருளில், மட்டி சாம்பிராணி எனும் வகைச் சொல் வந்ததைப் பார்க்க. (15) பட்டுப பூச்சி பட்டு-பூச்சி, பட்டையுண்டாக்கும் பூச்சி அல்லது புழு என்பதாம், பட்டு என்பது தமிழ் மொழி: ஓர்வகைப் பூச் சியினின்றும் பட்டு உண்டாகிறது என்னும் உண்மையை ஐரோப்பிய சீனர்களிடமிருந்து கற்கு முன்னரே தமிழ்நாட்டார் அதை அறிந்துளார் என்கிறதை இதல்ை ஊகிக்கலாம். - (16) அம்மிகுழவி குழவி என்ருல் குழந்தை அப்படியிருக்க குழவி என்பது சிறு கல்லுக்கு எப்படி பெயராயிற்று : முன் காலத்தில் பெரிய கல்லின்மீது ஏதாவது ஒரு பதார்த்தத்தை வைத்து, அதை அரைக்கவோ, நசுக்கவோ, சிறு கல்லொன்றை உபயோகிப்பது வழக் கம் நாளா வர்த்தத்தில் அவைகளிலிருந்து, சற்றேறக்குறைய நீண்ட சதுரமாயிருக்கும் அம்மியும், உருளையாயிருக்கும் குழவியும் உற்பத்தி யாயின. தாயைவிட்டு குழந்தை பிரியாதிருப்பதுபோல், அம்மியை விட்டு, அதன்மீது அறைக்கும் சிறுகல் பிரியாதிருப்பதால், அச்சிறு கல்லிற்கு குழவி என்று பெயர் வந்திருக்க வேண்டும். - (17) ஜோடுதவலே தவலே என்ருல் பெரிய பாத்திரம். அதி. னின்றும் தண்ணீரை எடுத்துக்கொள்ள உபயோகப்படும் சிறு பாத்த