பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 படும். இப்பொழுதும் பழய கோயில்கள் முதலிய கட்டிடங்களைக் கவனிப்போமாயின் அங்கு காற்றும், வெளிச்சமும் புகுவதற்காக, ஏற் படுத்தப்பட்ட சன்னல்கள், பல கண்களைப் போன்ற துவாரங்களை யுடையவைகளாகக் காணப்படும். சமஸ்கிருதத்தில் இதற்கு கவாட்சம் என்று பெயர், கவாட்சம் என்ருல் பசுவின் கண் என்று பொருள்படும். பசுவின் கண்களைப் போன்ற துவாரங்கள் அமைக்கப்பட்டதால். அப் பெயர் வந்ததை கவனிக்க. மான் கண்களும் போன்ற துவாரங்களை யுடைய சன்னல்கள் பூர்வகாலத்தில் இருந்ததாக சீவக சிந்தாமணியில் கூறப்பட்டிருப்பதைக் கவனிக்க. - (9) கொடி என்கிற பதம் செடியின் படர் கொடிக்கும் உபயோ கப்படுகிறது. ஆடைகளை உலர்த்தும் கொடிக்கும் உபயோகப்படு கிறது. பூர்வ காலத்தில் ம்ரங்களின் அல்லது செடிகளின் நீண்ட கொடிகளிலேயே ஆடைகளை உலர்த்தும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். அதன்பின் கயிறுகளையும் மூங்கில்களையும் இதற்காக உய யோகித்தபோதிலும், பழய வழக்கத்தால் இவைகளுக்கும் கொடி என்ற பெயர் வழங்கலாயிற்று என்று ஊகிக்கலாம். (10) சிங்ககாதம் சாதாரணமாக யாராவது அட்டகாசம் டம் பம் பண்ணினுல், என்ன சிங்கநாதம் பண்ணுகிருன் என்று சொல் கிருேம்; சிங்கநாதம் என்பது, சிருங்கம்-நாதம் என்கிற இரு சொற் களாலாயது. சிருங்கம் என்ருல் மிருகத்தின் கொம்பு. முற் காலத்தில் அரசர்களோ அல்லது பெரிய கனவான்களோ புறப்பட்டால் மிருகங் களின் கொம்புகளாலாகிய தாரைகள்-ஊது கொம்புகள்-முழங்கு வது வழக்கம். ஊது கொம்புகளை ஊதிக்கொண்டு அட்டகாசமாய் மனிதர்கள் வருவதினின்றும், யாராவது ஒருவன் டம்பமாக ஏதாவது செய்தால், என்ன சிங்கநாதம் செய்கிருன் என்றும் சொற்ருெடர் உண் டாயிருக்க வேண்டும். - - (11) திருவிளக்குச் சீட்டு ஏதாவது இரண்டிலொன்றை நிர் ணயிக்க வேண்டுமென்ருல், தற்காலம் சிலர் இரண்டு கடிதங்களில் அவற்றை எழுதி, கோயிலில் ஸ்வாமியின் சந்நிதானத்திலோ, அல்லது: வீட்டில் செய்வதென்ருல் விளக்கின் முன்பாகவோ, அவைகளை வைத்து, ஒன்றுமறியாத சிறு குழந்தையை, அவற்றுள் ஒன்றை எடுக் கும்படிச் செய்யும் வழக்கமுண்டு. அநேகம் வீடுகளில் தற்காலத்தில்