பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

捞4 என்று மாணிக்கவாசக ஸ்வாமிகளுக்குப் பட்டப் பெயர் அளிக்கப் பட்டதைக் காண்க. (84) எட்டி என்பது பூர்விக தமிழ் அரசர்கள் வைசியர்களுக் குக் கொடுத்த பட்டப் பெயராகும். எட்டிப் பூ என்பது அப்பட்டம் பெற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பொற் பூவின் பெயராகும். இது பூர்வீக கிரந்தமாகிய மணிமேகலையினின்றும் நாம் அறிவதாகும்; அன்றியும் எட்டிப் பெயர்பெற்ற வைசியருடைய மனைவிகளும் எட்டி எனும் பட்டம் பெற்றதைக் கவனிக்க. தற்காலம் ‘சர்’ எனும் பட்டம் பெற்றவருடைய மனைவிக்கு லேடி என்று வழங்குவதுபோல் அக் காலமும் அந்த கெளரவம் ஸ்திரீ களுக்குக் கொடுக்கப்பட்டது என் பது நாம் அறிகிருேம். - - (85) ஏளுதி என்பது பழைய தமிழ் அரசர்களால் தங்கள் மக் திரிகளுக்குக் கொடுக்கப்பட்ட, பட்டப் பெயராம். எதிை மோதிரம் என்ருல் எளுதி பட்டம் பெற்றவர்கட்கு அரசனளிக்கும் மோதிரம் என்பதாம். இதற்குத் திருக்கைச் சிறப்பு என்றும் பூர்வீக பெயர் உண்டு ஜீவக சிந்தாமணியின் உரையில் இதைப் பற்றி காண்க. (86) மெய்க்காப்பு. மெய்--காப்பு. உடலைக் காப்பான் என்று பொருள்படும். மெய்க்காப்பாளன் என்ருல் அத்தொழிலை அருகிலிருந்து செய்பவன் என்றும் பூர்வ காலத்தில் பாண்டிய மன்னர்கட்கு எந்நேர மும் அவர்களருகிலிருந்து அவர்களைக் காப்பவர்கட்கு இப்பெயர் கொடுக்கப்பட்டது. தற்காலமும் அவ்வழக்கம் பற்றி மதுரை மீனுட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பட்டாபிஷேக காலத்தில், பாண்டிய அரச கை வரும் பட்டருடன், மெய்க்காப்பாளன் என்று ஒருவன் வேடம் தரித்து வருவதைக் காண்க. அன்றியும் ' உடங்லைக் குதிரைச் சேவ கர் " என்று பூர்வீக தமிழர் கல் வெட்டுகளில் கூறப்பட்டிருக்கிறது. இச்சொற்ருெடர்க்கும் பொருள், பரியேறும் மெய்க்காவலர் என்பதாம்; தற்காலத்தில் அரசர்க்கும் ராஜப்பிரதிநிதிகள் முதலியோருக்கும் பாடி கார்ட் (Body Guard) என்றிருப்பதுபோல் அக்காலத்திலும் தமிழ் நாட்டிலிருந்தது என்பதை இச்சொற்களால் நாம் நன்கு அறிகிருேம். (87) ஊராளன்தேர் என்னும் பதத்தை மணிமேகலையில் காண்கிருேம். இதற்கு ஆகாய விமானம் என்று பொருள் செய்யப்பட் டிருக்கிறது; அதாவது பூமியின் பேரில் செல்லாத தேர் என்று, ராமா