பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தமிழ் நாவல்'

தோழர்களாக, நம் இதயத்தோடு ஒட்டி உணர்பவர்களாக ஆகிவிட்டார்கள். செய்யுளில் அமைந்த காவியத்தைப் பொருள் அறிந்து படித்து இன்புறுவது எல்லாராலும் முடியாத காரியம். அதற்குத் தகுதியும் பயிற்சியும் வேண்டும், ஆனால் இந்த நாவல்களோ உரைநடையில் அமைந்த காவியங்களாக, நமக்கு விளங்கும் தெளிவான நடையில், இயல்பாக அலையோடும் அந்த நடையின் அழகோடு மாசுமறுவற்ற கண்ணாடியிலே காணும் காட்சிகளைப் போன்ற நிகழ்ச்சிகளோடு மனத்துக்கு மகிழ்ச்சியை ஊட்டின. காவியங்களில் இருப்பதைப் போலவே இவற் றிலும் வருணனைகள் இருந்தன. ஆனால் காவிய வருணனைகளில் உயர்வு நவிற்சி, இருந்தது; இவற்றில் தன்மை நவிற்சி இருந்தது. உள்ளதை உள்ளபடியே காட்டினாலும் அதில் ஒரு பொலிவு இருந்தது. போட்டோப் படம் பிடிக்கிறவன் உள்ளதை உள்ளபடியேதான் எடுக்கிறான். ஆனால் இன்ன கோணத்தில் இன்ன நிலையில் எடுத்தால் காணவேண்டியதைக் காட்டவும், காண வேண்டாததை மறைக்கவும் முடியும் என்ற உத்தி அவனுக்குத் தெரிகிறது இன்ன பகுதியை நன்றாகப் புலப்படச் செய்ய வேண்டும் என்பதை அவன் அறிவான். அதனால் அவன் எடுக்கும் படம் கலை அழகுடன் விளங்குகிறது. [1]

அவ்வண்ணமே நல்ல நாவல்களில் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட எதையும் ஆசிரியர்கள் சொல்வதில்லை. உயிரும் உடம்பும் கையும் காலும் அகமும் முகமும் படைத்து உலாவும். மனிதர்களையே காட்டுகிறார்கள். கட்டுக்கதை, புனைவு என்று சொன்னாலும் அவ்வளவும் உண்மையாகவே தோன்றுகின்றன. நாவலைப் படிக்கும்போது. நாம் அதில் வருபவர்களில் ஒருவராகி விடுகிறோம். நம்முடைய இதயத்தோடு இதயம் ஒட்டி


  1. Robert Liddel: A Treatise on the Novel, pp. 34,35.