பக்கம்:அமல நாதன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமல நாதன்

அரசனுக்கும் பெரியவர்கள் துணைவேண்டும். என்பதற்கன்றோ வள்ளுவர், பெரியாரைத் துணைக்கோடல் என்னும் அதிகாரத்தை அரசியல் பகுப்பில் அமைத்து கூறியுள்ளார். ஆகவே, பெருஞ்சிறப்புடைய பேர் அரசர்கட்கே பெரியார் துணைவேண்டுமேல், ஏனையோர்க்கு வேண்டும் என்பதனை எடுத்து இயம்பவும் வேண்டுமோ?

"தம்மில் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள எல்லாம் தலை”

என்னும், குறளே பெரியார் துணைக்கோடலின் சிறப்பினைத் தெரிவிப்பதாகும். அதாவது தம்மினும் அறிவாலும் வயதாலும் பெரியவர்களாய் இருப்பவரை உறவாகக் கொண்டு ஒழுகுவதே எல்லா வன்மைகளிலும் தலை சிறந்த வன்மை என்பதாம்.

அமலநாதன் ஓர் அநாதைச் சிறுவன். அவன் தாயை இளமையிலே இழந்தவன் ; தந்தையாரைச் சமீபத்தில் பறி கொடுத்தவன். இவனுடன் பிறந்தவர் ஆணிலும் இலர்; பெண்ணிலும் இலர். தாய் இன்மையால் அவன் சுவை இழந்தான்; தந்தை இறந்ததால் கல்விச் செல்வமும் இழந்தனன். அமலநாதன் தந்தையார் பெருந்தன்மையான தொழில் எனப் பேருலகம் பேசும் ஆசிரியர் தொழிலே ஆவலாய் நடத்தியவர். அத்தொழிலையும் அவர் பட்டின வாசலில் பகட்டாய் நடத்த வாய்ப்பின்றிக் கிராம ஆசிரியராகவே கழிக்க நேர்ந்தது. அவருடைய நண்பரே ஆபத்சகாயர் எனபவார். அவருக்குத்தான அமலநாதன் தங்தையாரின் குடும்ப வரலாறுகள் யாவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/7&oldid=1228726" இலிருந்து மீள்விக்கப்பட்டது