பக்கம்:இருட்டு ராஜா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70இருட்டு ராஜா


“எப்ப வாசிக்கணுமின்னு எனக்குத் தெரியும்!” என்றான் நாதசுரக்காரன். பிறகு சிறிது வாசித்தான். தனது வாசிப்பில் தானே பெருமை கொண்டவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

“நாதசுரம் நாதசுரம்னு கத்தத் தெரியுதே தவிர, வாசிப்பை ரசிக்கிறவங்க யாரும் இருக்கதாத் தெரியலியே!” என்று பக்கவாத்தியக்காரனிடம் சொன்னான்.

“ரசிக மகாஜனங்கள் நிறைஞ்ச சபையிலே மட்டும் தான் வாசிப்பேன்; இப்படி திருவிழாவுக்கெல்லாம் ஊத வரமாட்டேன், அது நம்ம கொள்கையின்னு முதல்லேயே சொல்லியிருக்க வேண்டியது தானே? எதுக்காக இவ்வளவு ரேட்டுன்னு பணம் பேசி, அட்வான்சும் வாங்கினீரு? அப்படிப் பேசி வந்துட்டீரில்லையா? அப்போ ஒழுங்காக வாசிக்க வேண்டியதுதானே உம்ம கடமை? அதை விட்டுப் புட்டு எத்துவாளித்தனம் பண்றதும், எடக்குப் பேசுறதும், பல்லை இளிக்கிறதும்னு வந்தா, நாங்களும் எங்க குணத்தைக் காட்டத் துணிவோம்!”

கணீரிடும் குரலில் முத்துமாலைதான் அறிவித்தான்.

கூட்டம் விலகி அவனுக்கு வழி விட்டது. அவனையும், அவன் கூட வந்து நின்றவர்களையும் நாதசுரக்காரன் பார்த்தான். “நீங்க யாரோ?” என்றான்.

“நான் யாருங்கறது முக்கியமில்லே. இது ஊர் பொதுக்கோயில். கொடை பொதுத் திருவிழா. பொதுவான வரிப் பணத்திலேயிருந்துதான் சகல செலவுகளும் நடக்குது. வரிப்பணத்திலேயிருந்துதான் உமக்கும், நாதசுர வாசிப்புக்காகப் பணம் கொடுத்திருக்கு. நான் இந்த ஊர்க்காரன். இவங்களும் இந்த ஊர்க்காரங்கதான். அதாவது திருவிழா நடக்கிறதுக்காகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/72&oldid=1139333" இலிருந்து மீள்விக்கப்பட்டது