பக்கம்:இருட்டு ராஜா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82இருட்டு ராஜா


சீட்டி ஒலி அன்று மிக அதிகமாகக்கேட்டது. பாட்டுகளும் தீவிரமாக முழங்கின. வழக்கமாக அவன் அடிக்கடி பாடாத பாட்டு ஒன்று இரவு பூராவும் திரும்ப திரும்பப் பொங்கி வழிந்தது அவனிடமிருந்து

அவள் போனாளே
பறந்து போனாளே!-என்னை
மறந்து போனாளே-விட்டுப்
பிரிந்து போனாளே-ஐயோ
போயே போனாளே!

தெருக்களைச் சுற்றிச் சுற்றி வந்தான். அமைதியை இழத்து ஆத்மா ஏங்கி அலறுவது போல் ஓலமிட்டான்.

எட்ளடிக்குச்சுக்குள்ளே-ஐயா
எத்தனை நாளிருப்பேன்-நான்
எத்தனை நாளிருப்பேன்-இன்னும்
எத்தனை நாளிருப்பேன்!

தனது வீட்டுக்குள்ளே தூக்கம் கலைந்து புரண்டு புரண்டு தங்கராசு அதிசயித்தான். இன்னிக்கு முத்துமாலைக்கு என்ன வந்துட்டுது? ஏன் இந்தப் போக்குக்குப் போறான்?

அவனுக்கு மனசுக்குள்ளே என்னவோ நேர்ந்திருக்க வேணும் என்று தங்கராசுக்குத் தோன்றியது. “நான் அவனைப் பார்த்துப் பேசியும் நாளாயிட்டுது; நாளைக்கு அவனிடம் கேட்கணும்” என்று எண்ணிக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/84&oldid=1139398" இலிருந்து மீள்விக்கப்பட்டது