பக்கம்:இருட்டு ராஜா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்53

 முத்துமாலை அதற்கெல்லாம் பயந்தவனா! என்ன? அவன், தோளில் கிடந்த துண்டை உதறித் தலைப்பா கட்டிக் கொண்டு, கால்கரண்டை வரை தொங்கிய வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, வேகமாக நடக்கலானான்.

சிறிது தூரம்தான் நடந்திருப்பான். அவனுக்குப் பின்னே யாரோ ஒடி வருவது போல் காலடி ஓசை கேட்டது. அவன் நின்றதும் அந்தச் சத்தம் நின்றது.

அவன் திரும்ப நடக்கத் தொடங்கியதும், சரட்-சரட் என்று மணலில் அடி எடுத்து வைக்கும் சத்தம் மீண்டும் கேட்டது.

முத்துமாலை பேய் பிசாசுகளில் நம்பிக்கையில்லாதவன் தான் இருப்பினும், அந்த நேரத்தில் பேய்-பிசாசு நினைப்புதான் அவன் மனசில் எழுந்தது. பிறகு துணிந்து “யாரது?” என்று அதட்டலாகக் கேட்டான், நின்றான்.

ஒரு ஆள் நெருங்கி வருவது தெரிந்தது. இருட்டுத் தான் என்றாலும், இருளில் பழகிவிட்ட அவன் கண்களுக்கு அது “ஒரு பொம்பிளை” என்று புலனாகியது.

இந்த நேரத்திலே யாருடா இது! மோகினிப் பிசாசு என்பார்களே, அதாக இருக்குமோ என்று துணுக்குற்றது அவன் மனம். ஆயினும் சுதாரித்துக் கொண்டு காறித் துப்பினான். “யாரம்மா அது? எந்த ஊருக்குப் பேகணும்?” என்று கேட்டான்.

“இந்த ரோடு எந்த ஊருக்குப் போகுது ஐயா?” என்று கேட்டாள் அவள். தீனமாக ஒலித்தது அவள் குரல்.

சாியாபோச்சு போ! எந்த ஊருக்குப் போற வழியின்னு தொியாமத்தான் நடக்கிறியா? ஊர் தவறி, ராத்திரி நேரத்திலே, ஸ்டேஷன் தெரியாமல் இங்கே இறங்கிட்டியா? ராத்திரி தனியா இப்படி வரலாமா? அதுவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/55&oldid=1139022" இலிருந்து மீள்விக்கப்பட்டது