பக்கம்:இருட்டு ராஜா.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்87

 போலிருக்கு. அவள் பேச்சில் இருந்தே அது ஒரு மாதிரி விளங்கியதே!

அவள் ஊரோடு இருந்திருந்தால், அவன் ஆசைப்பட்டது போல் அவனையே கல்யாணம் செய்து கொண்டிருந்தால், திரிபுரத்தின் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருக்குமா என்றொரு எண்ணம் அவன் உள்ளத்தில் தெரித்தது.

அப்பவும் அவளுக்குச் சந்தோஷம் கிட்டியிருக்காது என்று சொல்லணும். நானும் ஒரு வகையில்—வேறொரு தினுசில் குணம் கெட்ட குப்பானாகத் தானே இருக்கிறேன்! அவளுக்கு இப்போதாவது பட்டுக்கும் நகைகளுக்கும் ருசிருசியான சாப்பாட்டுக்கும் வழி கிடைத்திருக்கிறது. அந்த விதத்தில் அவளுக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. என்னோடு அவளுடைய வாழ்க்கை இணைந்திருக்குமானால், இந்தவகை திருப்தியும் அவளுக்கு ஏற்பட்டிருக்காது.

முத்துமாலை சிரித்துக் கொண்டான்,

—திரிபுரத்தின் மன நிலையும் எளிதில் திருப்தி காண முடியாத ஒன்றுதான். அவள் எனக்கு மனைவியாக வந்திருந்தால், தான் திருப்தியடையாமல் போவதுடன், சதா தொண தொணத்தும் புழு புழுத்தும் எனது நிம்மதியையும் கெடுத்துப் போடுவாள் அப்பவும் அவளுக்கு மனநோய் வராமல் போகாது. உள்ளத்து நோயுடன் உடல் நோயும் வந்து சேரும் அவளே எனக்கு ஒரு நோய் ஆகிப் போவாள். மனைவி என்பவள் ஒருவனின் வாழ்க்கையை அரிச்சு பொக்காகப் போகும்படி பண்ணுகிற ஒரு நோய் தான்; தீராத நோய்தான். நல்லவேளை. நான் தப்பிச்சேன்...

இந்த நினைப்பு அவனுக்குச் சிரிப்பு உண்டாக்கியது. பலமாக சத்தம் போட்டுச் சிரித்தான் முத்துமாலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/89&oldid=1139433" இலிருந்து மீள்விக்கப்பட்டது