பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

ஹிராடெடஸின்


★ மற்றும் சில தமிழ் மக்கள் கொஞ்சமேனும் உணவு இறையாமல் முழுவதுமாக உண்பார்கள். இதற்கு எடுத்துக் காட்டு வள்ளுவர் வாழ்க்கை.

★ குடிபோதையில் தமிழர்கள் இருக்கும் போது எந்தப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண மாட்டார்கள்.

★ கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பாரசீகம், கிரேக்கம் போன்ற நாடுகளுக்கு கடல் கடந்து சென்றது.

★ தமிழ் நாட்டில் சூரிய வணக்கமும், வழிபாடும் செய்வதுண்டு, இது பாரசீக மக்கள் இடையேயும் சென்று பரவியுள்ளன. மித்திரன், மித்ரா என்றால் சூரியன் என்று நாமதீப நிகண்டும், வேதங்களும், அபிதான் சிந்தாமணி போன்ற நூல்களும் கூறுகின்றன.

★ தெய்வங்களுக்கு தூப, தீப நைவேத்யம் செய்வது பற்றி ஹிராடெடஸ் கூறுகிறார். கிரேக்க நாட்டில் இவை உண்டு என்றும், பாரசீகத்தில் இல்லை என்றும் குறிப்பிடுகிறார். ஆனால்,இது தமிழர் பண்பாடு கோயிலில் பலி பீடம் அமைத்தால், புல்லாங்குழல் ஊதுதல், மாலைகளை சிலைகளுக்கு அணிவித்தல், சோற்றைப் பலி பீடத்தின் மேல் இறைத்தல் ஆகியன எல்லாம் தமிழர் பண்பாடுகளே. இவை கடல் கடந்து சென்ற பனையேறிகளாகிய பினீசியர்களால் கடைப்பிடிக்கப் பட்டு, பிறகு கிரேக்க நாட்டில் புகுத்தப்பட்டன என்கிறார் ஹிராடெடஸ்.

கடவுளுக்குப் பலியிடுதல் பற்றி, ‘மலையுறை கடவுள் குலுமுதல் வழுத்திக், நேம்பலிச் செய்தவீரர் நறுங்கையள்’ என்று ஐங்குறுநூறு கூறுகின்றது. மற்றும் நற்றிணை 343, அகநானூறு 166, பதிற்றுப் பத்து 30, போன்ற பாடல்கள் தெய்வத்துக்குப் பலியிடும் பழக்க வழக்கம் பற்றிப் பேசுகின்றன.

★ தமிழர்கள் சாஷ்டாங்கமாக விழுந்து வணக்கம் செய்வதுண்டு. அதாவது, இரண்டு கைகள் இரு முழங்கால்கள்,