பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

59


சோலான், நீ உலகில் உள்ள ஒவ்வொரு அரசனிடமும் பேசியிருக்க வேண்டும். எனக்கு எல்லையற்ற செல்வம் இப்போது இருந்தால், எல்லாவற்றையும் அவருக்கே வாரி வாரிக் கொடுத்திருப்பேன்! சோலான், சோலான் என்றார்.

மறுபடியும் அந்தப் பாரசீக மன்னன் சோலான் யார்? என்று கேட்ட போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்தச் சிதை மேலே படுத்துக் கொண்டே குரோசஸ் அந்த மன்னனுக்குப் பதில் கூறினார். சோலான் என்னென்ன கூறினாயோ அதெல்லாம் நடந்தேறி இருக்கின்றன என்று குரோசஸ் விளக்கமாகவே கம்பீரத்தோடு பேசினார்.

அடுக்கி வைக்கப்பட்ட குரோசசின் சிதையின் நான்கு பக்கங்களிலும் நெருப்பு எரியும் வேளையில் அரசன் சைரசுக்கு உடனே ஓர் எண்ணம் திடீரென்று வந்தது. “இவன் என்னைப் போல் எத்தனையோ நாடுகளை வென்றவன்; ஒரு காலத்தில் பேரரசு ஒன்றுக்கு மன்னனாக வாழ்ந்தவன்; மனிதரில் யார்தான் நிலையாக வாழ்பவர்? ஏதோ எனக்கு நல்ல நேரம், அதனால் இவனைச் சிறைப் பிடித்தேன்! ஏன், நானேகூட இறந்து போயிருக்கலாம் இல்லையா? எனவே, மனிதர்கள் என்ன செய்வார்கள்; அவர்களை ஊழ் என்ற ஒன்று ஆட்டிப் படைக்கும் போது?” என்பதே அந்தத் திடீர் எண்ணம்!

மன்னன், காவலர்களை உடனே கூப்பிட்டான்; எரிகின்ற சிதைகளை உடனே தண்ணீரைக் கொட்டி அணையுங்கள் என்று உரக்க ஓங்கிக் கூப்பாடு போட்டுக் கத்திக் கட்டளையிட்டான்!

சைரஸ் அரசர் தனது எண்ணத்தைக் கூறி முடிப்பதற்குள், நெருப்பு பலமாக எரிய ஆரம்பித்து விட்டது. உடனே குரோசஸ், அப்பொலோ தெய்வமே! நான் உனக்குக் கொடுத்த தெய்வக்