பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தவத்திரு குன்றக்குடி அடிகளார்

54

அருள்நெறி முழக்கம்


அத்தகு இளமையுள்ளங்களைத் தட்டி எழுப்பி, “நீ செய்ய முனைந்திருக்கின்ற செயல் நல்லதுதான். அதே சமயத்தில் நீ செல்லுகின்ற பாதை தவறுடையது” என்பதை எடுத்துக்காட்டி அவர்கள் உள்ளத்திற்கு ஒரு புத்துணர்ச்சி கொடுத்து அவர்களை நல்ல வழியில் இட்டுச் செல்கின்ற பெருமை ம.பொ.சி அவர்களுக்கும் அவர்கள் நிறுவிய தமிழரசுக் கழகத்திற்குமே உரித்தானது என்பதை நல்லறிவு படைத்த பெருமக்கள் யாவரும் ஒப்புக் கொள்ளுவர் என்பதில் எள்ளத்தனையளவும் ஐயமில்லை.

இருண்ட தமிழகத்தில் புத்தொளி வீசத் தொடங்கிய ம.பொ.சி அவர்களும் அவர்கள் நிறுவிய தமிழரசுக்கழகமும் வாழ்கவென மனமார வாழ்த்துகின்றோம். எனது நெஞ்சங்கலந்த வாழ்த்து அவர்களுக்கு நல்லதொரு வாழ்வைக் கொடுக்குமென்ற நம்பிக்கையில் மேலே செல்ல முனைகின்றோம்.

பண்டைத் தமிழினம் தீமையினையும் ஏற்று வாழ்ந்து வந்தது. அதனைப் போலத்தான் நீங்களும் வாழ முற்பட வேண்டும். மறந்தும் நெறி பிறழ்ந்து வாழாதீர்கள். நெறியினின்றும் தவறி வாழுகின்ற வாழ்க்கை வாழ்க்கையாகாது. “மானம் போனபின் வாழ்வதுமொரு வாழ்வாமோ” என்ற குறிக்கோளில் அந்த உயரிய அடிப்படைக் கோட்டைப் பின்பற்றி வாழ்ந்தவன் தமிழன் - அவனது இலட்சியத்துக்கு எந்தவித இடையூறும் வராமல் பாதுகாப்பது அவர்களின் வழித்தோன்றலாகிய நம் கடமை.

தித்திக்கும் தேன் மொழி தமிழ் மொழி தமிழ்மொழியின் மூலம் தமிழ்நாட்டில் கடவுட் கொள்கை பரவிற்று. தித்திக்கும் தீஞ்சுவைத் தமிழை, ஊட்டி வளர்க்கின்ற தாயாகவும் உலகனத்தையும் ஆக்கிக் காக்கின்ற கடவுளாகவும் தமிழர்கள் கருதினர்; வாழ்த்தி வணங்கி வழிபட்டனர்.

எத்தனையோ மொழிகள் இன்று நாட்டில் உலவுகின்றன. அத்தனையும் படித்துப் பார்த்தால் இன்று உலகப் பொதுமொழியெனப் பேசப்படுகின்ற ஆங்கில மொழிக்குத்