பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இலக்கியமும் கடவுள் நெறியும்



பேரன்புடையீர்!

மிழர் பண்டொரு காலத்துப் பீடுடன் வாழ்ந்தனர். நாகரிகத்தின் உச்ச நிலையில் உவகையோடு வாழ்ந்தனர். இமயத்திலும் - கங்கை வெளியிலும் - கடாரத்திலும் கன்னித் தமிலொழியை ஒலித்து, ஒப்பற்ற புகழோடு வாழ்ந்தனர். தமிழர் நாட்டின் வட எல்லை ஒருகால் கங்கை நாடு - மற்றொருகால் இமயப்பனிவரை இமயத்தின் உச்சியில் தமிழர் கொடி பறந்தது ஒருகாலத்தில். தமிழ்ப் பெருங்குடியினரது கருத்தெல்லை என்றுமே உலக எல்லையாகவே இருந்து வந்திருக்கின்றது. இங்ஙனம் கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே தோன்றி - ஓங்குயர் சீர்த்தியுடன் வாழ்ந்த தமிழினத்தார் காலப்போக்கிலே தளர்வெய்தினர். ஒன்றுபட்டிருந்த தமிழ்க்குலம் சாதியின் பெயராலும் சமயத்தின் பெயராலும் சிதறுண்டது. வலிவும், பொலிவும் இழந்து நாமமதே தமிழரெனக் கொண்டு, ஊமையராய் - செவிடராய் வாழத் தலைப்பட்டனர். அவர்தம் நாடும் சீரழிந்தது. நாகரிகமும் நலிவெய்தியது. இன்பத் தமிழும் இருப்பிடம் தேடலாயிற்று. தேய்ந்த தமிழகத்தின் எல்லையாம் வடவேங்கடத்திற்குக் கூட இல்லை - இந்தச் சென்னை நகருக்குக் கூட ஆபத்து ஆந்திர சகோதரர்களால் ஏற்படுகின்ற அளவுக்குத் தமிழரது உறக்கம் நீடித்து விட்டது. உறக்கத்திற்கும் ஒரு விடிவுக்காலம் வரத்தானே வேண்டும். தமிழரைப் பேருறக்கத்தினின்றும் எழுப்பி, ஆக்கத்துறையில் அழைத்துச் செல்லும் தமிழரசுக் கழகத்தினரை வாழ்த்துகின்றோம். தமிழர்