பக்கம்:தேன் சிட்டு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேன் சிட்டு

9



தோன்றும் அதன் கரிய அலகை நான் ஊன்றிப் பார்த்திருக்கிறேன். அதிலே பொன் மயமான மகரந்தத் தூள் ஒட்டியிருக்கும். தேன் சிட்டுத் தன் அலகால் ஒரு மலரிலுள்ள மகரந்தத் தூள் மற்றொரு மலருக்குச் சேர்ந்து அம்மலர் பயன் பெறுமாறு செய்கின்றது. இவ்வகையில் மரம், செடி, கொடிகளின் இனம் பெருகி ஒங்குவதற்கு இந்தத் தேன் சிட்டு உதவுகிறது. உண்ட வீட்டுக்கு உவந்து தொண்டு புரியும் இச்சிட்டின் தன்மை என் உள்ளத்தைக் கவர்ந்திருக்கிறது.

தேன் சிட்டிற்குப் பின்னால் எங்கள் தோட்டத்திற்கு வருவது மைனா. இதை அழகுநாக்குருவி என்பார்கள். அழகாகப் பேசக்கூடிய திறமைவாய்ந்த சிறு பறவையாதலால் இதற்கு அப்பெயர் வந்திருக்கிறது.

மைனாவைப் பெரும்பாலும் இணையாகவே காணலாம். ஆணும் பெண்ணும் ஒன்றை விட்டு ஒன்று பெரிதும் பிரியாமலிருந்து இரை தேடும். மைனா நிலத்தில் அமர்ந்தே பூச்சி பிடிக்கின்றது.

தேன் சிட்டைப்போலவே கரிக் குருவியும் மைனாவும் வேறொரு வகையில் பயிர் பச்சைகளுக்கு உதவுகின்றன. பயிர்களையும், செடிகளையும் அழிக்கும் புழுக்களையும், விட்டில் முதலிய பூச்சிகளையும் வேட்டையாடி அவை ஒழிக்கின்றன. தாவரங்களில் இனவிருத்திக்குத் தேன் சிட்டு உதவுகின்றதென்றால், அவற்றிற்குத் தீங்குசெய்யும் பகைவர்களை ஒழிப்பதில் மற்ற இரண்டு குருவிகளும் உதவுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/10&oldid=1138329" இலிருந்து மீள்விக்கப்பட்டது