பக்கம்:தேன் சிட்டு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தேன் சிட்டு



உருளுகின்றது. அதன் உள்ளத்திலே கருணை யில்லையா? உணர்ச்சியே இல்லையா? அதன் உள்ளம் வெறும் கருங்கல்லா?

காதலின் உயர்வைக் காலச் சக்கரம் பார்த்திருக் றது; காமத்தின் இழிவையும் அது பார்த்திருக்கிறது. இராவணனுடைய காமத்தீ அரக்கர் குலத்தைச் சுட்டெரித்தது காலச் சக்கரத்திற்குத் தெரியும்; ஷாஜஹானின் உயிர்க் காதல் கலைமணியான தாஜ்மஹாலாக வடிவம் பெற்றதும் அதற்குத் தெரியும். அன்பு, கருணை முதலிய உயர்ந்த உணர்ச்சிகளின் அருஞ்செயல், பொறாமை, கோபம் முதலிய இழிந்த உணர்ச்சிகளின் கொடுமை ஆகிய அனைத்தையும் காலச் சக்கரம் கண்டிருக்கிறது. எல்லா வற்றையும் பார்த்துக்கொண்டு அது மெளனமாகப் போய்க்கொண்டே இருக்கிறது. அதன் மெளனத்தின் பொருளைக் காண்பவர்கள் அருமையிலும் அருமை. அப்படிக் காண்பவர்களே பாக்கியவான்கள். அவர்களுக்கே காலச் சக்கரம் வந்த வழி தோன்றுகிறது. அது செல்லும் பாதையும் தோன்றுகிறது. காலச் சக்கரத்தில் கட்டுண்ணாம்மல் தனித்து அப்பால் நின்று சிருஷ்டியின் விளையாட்டைப் பார்க்க அவர்களுக்கே இயலும். மற்றவர்களெல்லாம் காலச் சககரத்தில் கட்டுண்டவர்களே.

காலச் சக்கரம் என்று தேய்ந்து விழும்? அதன் ஒட்டம் என்று ஓயும்? கற்பனை செய்யவே முடிய வில்லை. அதன் ஆரக்கால்களின் ஆணிக் குமிழ்களே இன்னும் தேயவில்லை. அப்படியிருக்கக் காலச்சக்கரம் எப்பொழுது தேயப் போகிறது? அது தேயவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/21&oldid=1141976" இலிருந்து மீள்விக்கப்பட்டது