பக்கம்:தேன்பாகு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60


"எங்கள் பாட்டி செத்துப் போகும் போது கத்தரிக்காய் கறி வேண்டும் என்று கேட்டாளாம். அப்போது இந்த ஊரில் இரண்டு மூன்று வீடுகளில் கத்தரிச்செடி பயிரிட்டிருந்தார்களாம். என். தகப்பனார் அவர்களைக் கத்தரிக்காய் கேட்ட போது ஒருவராவது கொடுக்கவில்லையாம். என் பாட்டி தன் ஆசை நிறைவேறாமலே செத்துப் போய் விட்டாள். என் தகப்பனார். 'இனிமேல் நானே வீட்டில் கத்தரிச் செடி பயிர் பண்ணப் போகிறேன்; இந்த ஊரில் யார் கேட்டாலும் கொடுக்கப் போகிறதில்லை' என்று சபதம் செய்து கொண்டார். என்னிடம் இந்த விஷயங்களை எல்லாம் சொல்லித் 'தம் சபதத்தை நானும் காப்பாற்ற வேண்டும்' என்றார். அதனால்தான் நான் உங்களுக்குக் கொடுக்க முடியவில்லை" என்று சொல்வி வருத்தப்படுபவனைப் போலப் பாசாங்கு செய்தான்.

அவன் சொல்வதெல்லாம் பொய் என்பது வைத்தியருக்கா தெரியாது? அவர் பேசாமல் வந்த வழியே திரும்பி வீட்டுக்குப் போனார். போகும் போதே 'இந்த மடையன் என்னை ஏமாற்றப் பார்க்கிறான்; பார்க்கலாம். எனக்கும் ஒரு காலம் வரும்' என்று எண்ணிக் கொண்டார்.

இரண்டு மாதங்கள் ஆயின. ஒரு நாள் மட்டியப்பன் அவசர அவசரமாக வைத்தியரிடம் ஓடி வந்தான். "ஐயா, ஐயா! என் மகளுக்குக் கடுமையான ஜூரம் அடிக்கிறது. எங்கள் வீட்டில் கைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/62&oldid=1396501" இலிருந்து மீள்விக்கப்பட்டது