பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22

 புறப்பட்டு, மதுரை போய்ச் சேர்ந்தேன். ஸ்டேஷனிலிருந்து எங்கள் வீட்டிற்கு விரைந்து சென்றேன். எங்கள் வீட்டில் இரண்டாம் கட்டில், என் தாயார், தான் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் இடத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பதைக்கண்டு, அவர்கள் முகத்தைப் பார்த்தவுடன், பிரமாதம் ஒன்றும் நேரிடவில்லை என்று அறிந்தவனாய், கொஞ்சம் மனம் தேறி, அப்பா என்னவாக இருக்கிறார் அவர் செளக்கியம் தானே? அவருக்கு உடம்பு ஒன்றுமில்லேயே ' என்று உடனே கேட்டேன் அதற்கு அவர்கள் அவருக்கு உடம்பு ஒன்றும் அசெளக்கியமில்லை : நன்றாய்த்தான் இருக்கிறார், அதனால்தான் ஒரு கஷ்டம் வந்திருக்கிறது, என்று சாந்தமாய்க் கூறினார்கள். அதன் மீது கொஞ்சம் கோபத்துடன், அப்படியிருந்தால், என்னை இங்கு வரும்படி ஏன் தந்தி அனுப்பினீர்கள் ! என்று கேட்டேன். என் தாயார் கொஞ்சம் தழதழத்து பதில் உரைத்தார்கள்-'உலகயுத்தம் மறுபடியும் ஆரம் பித்து விட்டது, என்று உனக்குத்தெரியுமே-உன் தகப்பனார்-மறு படியும் ராணுவத்தில் சேர்வதாக தீர்மானித்து விட்டார்-நான் எவ் வளவு மன்றாடியும்-உன் தகப்பனார் குணம் தான் உனக்குத் தெரி யுமே-அவர் ஒன்றைத் தீர்மானித்து விட்டால், அவரை அத்தீர்மானத் தினின்றும் மாற்ற ஒருவராலும் முடியாது என்று-இப்பொழுது அவர் சைனியத்திற்கு ஆட்களை சேர்க்கும் உத்யோகஸ்தரி டம் போய் உத்திரவுபெற போயிருக்கிறார் "


ஒருவிதத்தில் இதைக் கேட்டு, மனத்தளர்ச்சி நீங்கினவனாய், அப்படியானால் இதற்காக என்னையேன் உடனே மதுரை வந்து சேரும்படி தந்தி அனுப்பினீர்கள்? அதிலும் என் பரீட்சை காலம் நெருங்கியிருக்கும்போது'- என்று வெறுப்புடன் கேட்டேன். அதற்கு என் தாயார் நயமாய், "அப்பா கோபித்துக் கொள்ளாதே அதற்காக-நான் இந்த தர்ம சங்கடத்தில் வேறொன்றும் செய் வதற்கில்லை - நான் இதைப்பற்றி உன்னிடம் பேசி, உன்னிடமிருந்து ஒரு வரம் வாங்கவேண்டுமென்றே இதைச் செய்தேன்"- என்று சொல்லி என் தோளின் மீது தன் கரத்தை வைத்து, கண்ணே!' நான் கேட்கப் போகும் வரத்தைக் கொடுப்பதாக, எனக்கு வாக்கு கொடு'- என்று கெஞ்சினார்கள். நான் உடனே அதற்கு "அம்மா நான் இதுவரையில் நீங்கள் கேட்பதைச் செய்யாமற் போனேனா? - நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள், உடனே செய்கிறேன்" என்று கூறினேன், உடனே அவர்கள் "நான் கேட்பதை நீ மறுக்க மாட்டாய் என்பதை நன்றாய் அறிந்தே, உன்னைத் தந்தி கொடுத்து வரவழைத்தேன்"- என்று கூறிவிட்டு, மெல்லிய குரலுடன் நீயும் ராணுவத்தைச் சேர்ந்து சண்டைக்கு உன் தகப்பனாருடன் போய் வரவேண்டும்"- என்று கூறக் கேட்ட நான், பகற்காலத்தில்