பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

30

 தியும் ஆறுக்குமேல் வேண்டாம் என்று மறுத்தேன். இவைகளை என் கைக்குட்டையில் ஜாக்கிரதையாகக் கட்டிக்கொண்டு, என் நண்பரிட மிருந்து விடைபெற்று வீட்டிற்குத் திரும்பினேன் வருகிற வழியில அன்று வெள்ளிக் கிழமையாயிருந்தபடியால், புஷ்பக் கடைக்குப் போய் என் தாயார் தினம் பூஜை செய்யும் தகப்பனாரின் படத்திற்காக, வழக்கம்போல் ஒரு மல்லிகை மாலை வாங்கிக் கொண்டுபோய், அதை என் தாயாரிடம் கொடுத்துவிட்டு, எனக்கு அதிர்ஷ்டவசத்தால் அன்று கிடைத்த ஆறு மங்குஸ்தான் பழங்களையும் காட்டினேன். அவர்கள் மிகவும் சந்தோஷப் பட்டவர்களாய் "உன் தகப் பனாருக்குக் கொடு” என்றார்கள் அதாவது தகப்பனாரின் படத்திற்கு நிவேதனம் செய் என்று அர்த்தம், நான் கை கால்களை சுத்தி செய்து கொண்டு அப் பழங்களை எடுத்துக் கொண்டுபோய் என் தகப் பனாரின் படத்தெதிரில் வைத்து, "அப்பா! நீங்கள் விரும்பிய பழங்கள் இதோ கொண்டு வந்தேன்! என்று "கூறினேன் அப்பொழுது என்னையுமறியாதபடி துயரமுற்றவனாய், கண்ணீர் சொரிந்து அப்படியே சாய்ந்து விட்டேன்.


எவ்வளவு காலம் அப்படியிருந்தேன் என்று எனக்குத் தெரியாது; எனக்கு பிரக்ஞை வந்து கண் விழித்தவுடன் 'அவனை எழுப்பாதே' என்று யாரோ கூறியதுபோல் என் செவியிற் பட்டது, என் கண்களை நன்றாய் திறந்து பார்க்க, என் எதிரில் பழங்களை காணாதவனாய், கோபத்துடன் 'பழங்களை யார் எடுத்தது? என்று கேட்டுத் திரும்பிப் பார்க்க, என் தகப்பனாரின் கண்களை என் கண்கள் சந்தித்தன என் தகப்பனார்! கண்ணே நான்தான் அப்பழங்களை உன் கையினின்றும் வாங்கிக் கொண்டேன்! என்று கூறினார் என் தாயார் அவருக்குப் பின்னால் சிரித்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள். அவரது வார்த்தை என் செவியில் அமிர்தம் பொழிவதுபோல், விழுந்தன! ஆனந்தம் அதிகப் பட்டவனாய், மெய்தளர்ந்து அப்படியே அவர் பாதத்தில் விழப்போனேன்-உடனே அவர் தன் இருகைகளாலும் என்னைக் கட்டியணைத்து என்னை முத்தமிட்டார் எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் அதுதான் அவர் என்ன முதல்விசை முத்தமிட்டது.


மிகுதி கதையை சீக்கிரம் சொல்லி விடலாம், அன்றிரவு நன்றாய் சாப்பிட்டுவிட்டு என் தகப்பனாருடன் ஒரே படுக்கையில் படுத்துக் கொண்டேன். அப்பொழுது மேற்கூறியபடி அபாயகரமான காயம் எனக்கு பட்ட சமயம், தனக்கு அந்த வெடி குண்டினால் சிறு காயம்தான் பட்டதாயும், உடனே தன்னை சில ஜப்பானியர்கள் கைதியாகப் பிடித்துக்தொண்டு போய், சிறையில் அடைத்ததாயும், அங்கு அவர்கள் எவ்வளவோ சித்திரவதை செய்தும் எங்கள்