பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

17

17 என்னுடைய மாஸ்காட் நான் எனது இடது கையில் சிறுவிரலில் அணிந்திருக்கும் ஒரு சிறு மோதிரமே, அது நாலு கோணமுள்ள நடு தட்டைப் பொன் மோதிரம். அதன் விலை 1/2 சவரன் கூட இராது. ஆயினும் அதை உலகிலுள்ள எந்த விலையுயர்ந்த பொருளுடனும் மாற்றிக் கொள்ள இசையேன். அதற்குக் காரணம் இங்கு நான் எழுதியிருக்கும் கதையை நீங்கள் படித்துப் பார்ப்பீர்களாயின் தெரியும். நான் பல கதைகளை எழுதியிருக்கிறேன் என்பது என் நண்பர்கள் அறிந்த விஷயமே. ஆயினும் அக்கதைகளுக்கும் இதற் கும் உள்ள வித்தியாசமென்னவென்றால் இது உண்மையான கதையாம் ! இதை, என் தாயார், பன்னிரண்டாம் வயதில், எங்கள் வீட்டில் நடந்த ஒரு கல்யாண சந்தர்ப்பத்தில், எனக்குச் செய்து போட்டார் கள். அது முதல் இத்தனை வருடங்களாக அதை என் விரலைவிட்டு எடுக்காமல் அணிந்து வருகிறேன். ஆயினும் மூன்று முறை இது என் விரலிலிருந்து காணாமற் போனது-பிறகு அகப்பட்டது. அது தான் இதன் விசேஷம். இதை அணிய ஆரம்பித்து இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு, நான் மாகாணக் கலாசாலையில் (Presidency College) வாசித்துக் கொண்டிருந்த பொழுது, ஒருநாள் சாயங்காலம் அங்குள்ள பெரிய கிரிக்கெட் (Cricket) எனும் பந்தாடும் மைதானத்தில் பந்தாட்ட விளையாட்டாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று என் விரலில் இம் மோதிரம் இல்லாதிருப் பதைக் கண்டு திடுக்கிட்டேன்; உடனே, சாயங்காலம் இருட்டிப் போகும் வரையில் அம்மைதானம் முழுவதும் தேடிப் பார்த்தேன். அகப்படவில்லை. சரி போனது போனதுதான் என்று மன வருத்தத் துடன் வீடுபோய்ச் சேர்ந்தேன்; அன்று புதன்கிழமை, இரண்டொரு தினத்தில், 'கிட்டா தாயின் வெட்டென மற' என்று படித்ததை கவனித்து, அதை மறந்தேன். ஆயினும் என் விரல் மோதிரம் காணா மற் போயிற்று என்பதை அறிந்த எனது பால்ய நண்பர் ஒருவர் வேடிக்கையாக 'சம்பந்தம்' இனிமேல், வகுப்புப் பரீட்சைகளில் எதி லும் நீ முதலாவதாக இருக்க மாட்டாய்! என்று கூறினார்; அவர் கூறி யது வேடிக்கையாகத்தான் இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். ஆயினும் அச்சமயம் என் மனதில் மிகவும் உறுத்தியது. - - காணாமற்போன ஒருவாரம் பொருத்து, மறு புதன்கிழமை தினம் அதே மைதானத்தில் நான் மறுபடியும் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த பொழுது, என் கண்ணில், புல் மத்தியில் ஏதோ "மின்மினு” என்று பட்டது. என்னவென்று குனிந்து அதை எடுத்துப் பார்த்த பொழுது,